உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 உடனடி தேர்வு முடிவு வெளியீடு

இதில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்காக சமீபத்தில் உடனடித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். இதன் முடிவுகள், ஜூலை 28ம் தேதி (இன்று) வெளியிடப்பட்டுள்ளன. வழக்கமாக, உடனடித் தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படுவதில்லை. மாணவர்களாக, தேர்வெழுதிய மையங்களுக்குச் நேரில் சென்று மதிப்பெண் சான்றிதழை வாங்கிப் பார்த்தால் தான், தேர்வெழுதிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்கிறோமா, இல்லையா என்பது தெரிய வரும். தற்போது, உடனடித் தேர்வு முடிவுகளையும் இணையதளத்தில் வெளியிட தேர்வுத் துறையும், பள்ளிக் கல்வித்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளன. www.dge1.tn.nic.in, www.pallikalvi.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. மதிப்பெண் சான்றிதழ்கள், 30ம் தேதி பிற்பகல் முதல் அந்தந்த தேர்வு மையங்களில் வழங்கப்படும் என்றும், மாணவர்கள் நேரில் சென்று இதை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா அறிவித்துள்ளார். உடனடித் தேர்வுப் பாடங்களின் விடைத்தாள் நகல் கோரியோ, மறுகூட்டல் கோரியோ மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 5ம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பம் பெற்ற அலுவலகங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற, மொழிப் பாடங்களுக்கு 550 ரூபாய், பிற பாடங்களுக்கு தலா 275 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். மறு கூட்டலாக இருந்தால், மொழிப்பாடம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கு தலா 305 ரூபாயும், பிற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்