உள்ளூர் செய்திகள்

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி

திருப்பூர்: அரசு பணியாளர் தேர்வாணையத்தின், குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கோவிந்தராஜ் அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து தொகுதி தேர்வுகள்; ஆசிரியர் தகுதி தேர்வு, சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும், பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, அரசு பணியாளர் தேர்வாணையத்தில், குரூப் 2ஏ பிரிவு ஊழியர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, 18ம் தேதி கடைசி நாள். இதற்கான பயிற்சி வகுப்பு, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது; முந்தைய தேர்வு, வினாத்தாள், தேர்வுக்கான பாடக்குறிப்பு வழங்கப்படும். வாரந்தோறும் தேர்வும், பயிற்சி இறுதியில் மாதிரி தேர்வும் நடத்தப்படும். சேர விரும்புவோர், நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்