பிளஸ் 2 மதிப்பெண்கள் சரிபார்ப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், உயர் மதிப்பெண்கள் பெற்ற பாடங்களில் இருந்து, 50 சதவீத மதிப்பெண்களும், பிளஸ் 1 பொதுத்தேர்வில், எழுத்துத்தேர்வு மதிப்பெண்களில், 20 சதவீதமும் கணக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள, 30 சதவீத மதிப்பெண்களுக்கு, மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதியுள்ளனர்.செய்முறை அல்லாத கலைப்பாடப்பிரிவு மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டு தேர்வுக்கான மதிப்பெண்கள், 30 ஆக மாற்றி கொள்ளப்படும். இம்முறையில் மதிப்பெண்கள் கணக்கிடப்படுவதால், குளறுபடிகள் ஏற்பட வாய்ப்பில்லை. பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்கான ஆவணங்கள், அரசு தேர்வுகள் இயக்ககத்தில் உள்ளது. இருப்பினும், அந்தந்த பள்ளிகள் மூலமும், மாணவர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், &'இம்மாத இறுதிக்குள், பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிளஸ் 2 மாணவர்களின், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டும் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 1 மதிப்பெண்கள் விரைவில் சரிபார்க்க அனுப்பப்படும். பள்ளிகள் தரப்பிலும் இதை உறுதி செய்த பிறகு, மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்படும்,&' என்றனர்.