உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: 184 பேர் ஆப்சென்ட்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 16 ஆயிரத்து 792 பேர் எழுதினர்.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75 மையங்களில் 8,197 மாணவர்கள், 8,779 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 976 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் 8,106 மாணவர்கள், 8,686 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 792 பேர் நேற்று தேர்வெழுதினர். 184 பேர் தேர்வெழுத வரவில்லை,மேலும் 4 தேர்வு மையங்களில் தனித்தேர்வர்கள் தேர்வெழுதினர். தேர்வு பணியில் வழித்தட அலுவலர்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் 100 நிலையான படை உறுப்பினர்கள், 5 குழுக்கள் கொண்ட பறக்கும் படை உறுப்பினர்கள் உட்பட 1,600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையங்களில் நடந்து வரும் அரசு பொதுத்தேர்வினை கலெக்டர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சி.இ.ஓ., கார்த்திகா உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்