உள்ளூர் செய்திகள்

அரசில் 20,000 காலியிடங்கள் மார்ச் மாதத்துக்குள் நியமனம்; கவர்னர் தகவல்

புதுடில்லி: மருத்துவத் துறையில் 27 டாக்டர்கள் மற்றும் டில்லி அரசு, டில்லி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் ஊழியர்கள் 627 பேருக்கு பணி நியமன உத்தரவை துணைநிலை கவர்னர் சக்சேனா நேற்று வழங்கினார்.டில்லி மாநில துணை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, விஞ்ஞான் பவனில் நேற்று நடந்தது. துணைநிலை கவர்னர் சக்சேனா, 27 டாக்டர்கள் உட்பட 627 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கினார்.அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 20,000 இடங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஊழியர்கள் நியமனம் செய்யப்படுவர்.தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் வாய்ப்புகளை உருவாக்க பிரதமர் மோடியின் அறிவுறுத்தல்படி பணி நியமங்கள் நடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 17,000 க்கும் மேற்பட்டோர் அரசின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளின் மொத்த நியமனங்களை விட இது அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்