உள்ளூர் செய்திகள்

வரும் 23ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், அக்., 23ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இது குறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், அக்., 23ம் தேதி காலை 09:30 மணியளவில் நடக்கும் முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகள் பங்கேற்று, நேர்காணல் நடத்த உள்ளனர்.இதில், 18 - 35 வயது வரையிலான பட்டதாரிகள், டிப்ளமா, ஐ.டி.ஐ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்கள், தங்கள் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் போட்டோவுடன் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 044 - 2723 7124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்