வரும் 24ம் தேதி பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழா
2021-22ம் ஆண்டு, வெற்றிகரமாக பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், அந்தந்த கல்லுாரி முதல்வர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பல்கலை இணையதளத்திலும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, வரும், 20ம் தேதிக்குள் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். பி.எச்டி., 2022 மே 11 முதல் 2023, ஆக., 10ம் தேதி வரை முடித்து சென்றவர்கள், விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எச்டி., மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு,https://b-u.ac.in/என்ற இணையதளத்தை, தொடர்பு கொள்ளலாம்.