உள்ளூர் செய்திகள்

ஆண்டிற்கு 250 ஏழை மாணவர்கள் சேர்கின்றனர்

கிண்டி பொறியியல் கல்லூரியின், 1957-1961ம் ஆண்டில் படித்த மாணவர்களின் பொன்விழா நிகழ்ச்சி, கடந்த ஆக., 14ம் தேதி நடந்தது. இவர்கள் சார்பில், தற்போது பொறியியலில் நன்கு படிக்கும் ஏழ்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. இதில், கல்வி உதவித்தொகையாக 12.5 லட்ச ரூபாய், அண்ணா பல்கலை துணைவேந்தரிடம், நிகழ்ச்சி அமைப்பு உறுப்பினர்கள் விஸ்நாதன், கிருஷண்சாமி, லவக்குமார், சாரி, ரங்காச்சாரி, பட்டாபிராம் உள்ளிட்டோர் வழங்கினர். இது குறித்து அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது: "அண்ணா பல்கலை மாணவர்கள் எப்போதும் படிப்பில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். ஆண்டிற்கு, இரண்டாயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்கிறார்கள். இதில், 250 மாணவர்கள் ஏழ்மை குடும்பத்தில் இருந்து வருபவர்கள். 1957-1961ம் ஆண்டில் படித்த மாணவர்கள் வழங்கிய 12.5 லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகை, ஏழை மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவர்கள் வழங்கிய உதவித் தொகை, ஆண்டிற்கு ஒரு மாணவனின் முழுமையான கல்விக் கட்டணத்தை செலுத்துவதற்கு உதவிபுரியும்" என்று  மன்னர் ஜவகர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை பொறியியல் துறை முதல்வர் சேகர் மற்றும், 1957-1961ம் ஆண்டில் படித்த மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்