உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து 26 மணிநேரம் சிலம்பம் சுழற்றி மாணவ மாணவிகள் உலக சாதனை

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தொடர்ந்து 26 மணிநேரம் சிலம்பு சுழற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. உலக சாதனையாளர் தினத்தை முன்னிட்டு 26 மணிநேரம் தொடர்ந்து குழுவாக சிலம்பு சுழற்றும் உலக சாதனை நிகழ்ச்சி பாளை., அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு துவங்கியது. ஒவ்வொரு குழுக்களாக 893 மாணவ, மாணவிகள் சிலம்பத்தை சுழற்றினர். நேற்றிரவு 7 மணி வரை தொடர்ந்து 26 மணிநேரம் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்தனர். இதைத்தொடர்ந்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. 26 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுழற்றி சாதனை படைத்த மாணவ, மாணவிகளை நெல்லை பல்கலை.,துணைவேந்தர் குமரகுரு, ரெக்கார்ட் அசிஸ்ட் வேல்ட் தலைவர் ராஜேந்திரன் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து உலகசாதனை சான்றிதழ்களை பல்கலை துணைவேந்தர் குமரகுரு வழங்க, அதனை தவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேசன் குணசேகர் பெற்றுக்கொண்டார். ஏற்பாடுகளை புனே டிரான்ஸ்வேர்ல்ட் எஜூகேஷன் அகாடமி, பிலிப்பைன்ஸ் தவோ மெடிக்கல் ஸ்கூல் பவுண்டேசன், வெங்கடாம்பட்டி டிரஸ்ட் சமுதாய கல்லூரி, வேலி அறக்கட்டளை மற்றும் பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்