தொழிற்பிரிவில் 2,948 பேர் சேர்க்கை பெற்றனர்
பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங், கடந்த மாதம் 30ம்தேதி முதல், சென்னை அண்ணா பல்கலையில் நடந்து வருகிறது. 30ம் தேதி, விளையாட்டுப் பிரிவின் கீழ், விண்ணப்பித்த மாணவர்களுக்கும், ஜூலை 1ம் தேதியில் இருந்து, 6ம் தேதி வரை, தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடந்தது. ஒரு வாரம் நடந்த தொழிற்பிரிவு கவுன்சிலிங்கிற்கு, 3,429 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில், 2,948 பேர் மட்டும் கலந்து கொண்டு, சேர்க்கைக்கான உத்தரவுகளை பெற்றனர். இந்த ஒரு வாரத்தில், 423 பேர், கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. மேலும், கவுன்சிலிங்கிற்கு வந்த மாணவர்களில், 58 பேர், எதிர்பார்த்த பாடப்பிரிவு கிடைக்காததால், சென்று விட்டனர். தொழிற்கல்வி மாணவர்களில், அதிகபட்சமாக, 706 மாணவர்கள், மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளனர். இதற்கு அடுத்ததாக, இ.சி.இ., படிப்பை, 662 பேர் தேர்வு செய்துள்ளனர். நேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடந்தது. இந்த பிரிவின் கீழ், 313 பேர் விண்ணப்பித்திருந்தனர். கட்-ஆப் 98ல் இருந்து, 87.25 வரை இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகள், கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். தொழிற்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், 2,948 இடங்கள் மட்டுமே பூர்த்தியாகி உள்ளன. இன்னும், 1,494 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்கள் அனைத்தும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள். வகுப்பு வாரியாக காலியாக உள்ள இடங்கள் விவரம்: ஓ.சி. - 278பி.சி.எம். - 85பி.சி. - 353எம்.பி.சி. - 256எஸ்.சி.ஏ. - 99எஸ்.சி. - 383எஸ்.டி. - 40 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில், 147 பேரும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மூலம், 2,801 பேரும் சேர்க்கை உத்தரவுகளை பெற்றுள்ளனர். காலியாக உள்ள இடங்கள், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நிரப்பப்பட உள்ளன.