உள்ளூர் செய்திகள்

ஜூலை 3, 4ம் தேதிகளில் தினமலரின் ஆன்லைன் வழிகாட்டி

உயர்கல்வி குறித்த மாணவர்களின் அனைத்து விதமான சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில், தினமலர் நாளிதழ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக, மாணவர்களின் நலன் கருதி, இரண்டாம் ஆண்டாக இந்த ஆண்டும் ஆன்லைன் வாயிலாக வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்நிகழ்ச்சியில், வரும் காலங்களில் உலகை ஆளப்போகும் முக்கிய துறைகள் எவை? அவை சார்ந்து வழங்கப்படும் படிப்புகள் மற்றும் வாய்ப்புகள்? படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியுடன் படிப்பது எப்படி? இன்ஜினியரிங் துறையில் புதிய வாய்ப்புகள் உட்பட மாணவர்களது அனைத்துவிதமான உயர்கல்வி சந்தேகங்களுக்கும் பேராசிரியர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், பிரபல கல்வியாளர்கள் மற்றும் கல்வி ஆலோசகர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங், டீப் லேர்னிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ் போன்ற பிரபலமான பிரிவுகளில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் துறை சார்ந்த நிபுணர்கள் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை வழங்குகின்றனர். தேசிய நுழைவுத்தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., ஐ.சி.டி., நிப்பர், எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ., ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.பங்கேற்கும் கருத்துரையாளர்கள்கல்வி ஆலோசகர்கள் நெடுஞ்செழியன் மற்றும் ஜெயப்பிரகாஷ் காந்தி, சென்னை அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்வி நிறுவன பேராசிரியர்கள் அய்யப்பதாஸ், ஸ்ரீதேவி, மணிகண்டன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.  உடனே பதிவு செய்யுங்கள்!காலை 10 முதல் 12 மணிவரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ள இந்த இலவச உயர்கல்வி ஆலோசனை நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கலாம். www.kalvimalar.com எனும் கல்விமலர் இணையதளத்தில் மாணவர்களின் பெயர், வகுப்பு மற்றும் மொபைல் எண் ஆகிய தகவல்களை அளித்து உடனே பதிவு செய்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்