துாக்கமின்மையால் 30 கோடி பேர் பாதிப்பு
கடலூர்: உலக தூக்கம் விழிப்புணர்வு தினத்தையொட்டி, இந்திய தூக்கம் சங்கம் சார்பில் சென்னையில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கில் கடலூர் கோவன்ஸ் சிறப்பு சிகிச்சை மைய நிர்வாக இயக்குநர் கலைக்கோவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அவர் பேசியதாவது:ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது மிக மிக அவசியம். தூக்கமின்மையால் பாதிக்கப்படும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகளை கண்டுபிடிக்கும் கருவி இந்திய அளவில் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் தூக்கமின்மை நோயை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக உள்ளது.இந்தியாவில் தைராய்டு பாதிப்பால் 1.50 கோடி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆனால் தினந்தோறும் தைராய்டு சோதனையை 5 லட்சம் மக்கள் எடுத்து வருகின்றனர்.இதே போல் தமிழகத்தில் 30 கோடி பேருக்கு தூக்கமின்மை பிரச்சினை இருந்து வருகின்றது. ஆனால் தினந்தோறும் ஆயிரம் பேர் மட்டுமே சோதனை செய்யக்கூடிய நிலை உள்ளது. அரசு சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூக்கமின்மை நோய் உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில் மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தூக்க நோய் நிபுணர்கள் பங்கேற்றனர்.