ஓ.பி.சி.,க்கு 50 சதவீத மருத்துவ இடங்கள் இல்லை!
இதனால், நடப்பு கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத ஒதுக்கீடு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து, மருத்துவப் பட்டப் படிப்புகளில், 15 சதவீதமும், மேற்படிப்புகளில், 50 சதவீத இடங்களும், மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.சட்டவரையறைஇந்நிலையில், &'தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில், மத்திய தொகுப்பில், 50 சதவீத இடங்களை, ஓ.பி.சி., பிரிவினருக்கு அளிக்க வேண்டும்&' என, தமிழக அரசு சார்பிலும், சில அரசியல் கட்சிகள் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், &'மருத்துவப் படிப்புகளில், மத்திய தொகுப்புக்கான இடங்களில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்&' என, உத்தரவிட்டது.இது பற்றிய சட்ட வரையறைகளை, மூன்று மாதங்களில் உருவாக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது.இதற்கிடையே, இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த உத்தரவிடக் கோரி, தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த வாரம், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, &'இந்த இட ஒதுக்கீட்டை தமிழகத்துக்கு மட்டும் வழங்கினால், சட்டச் சிக்கல் ஏற்படும். &'ஏற்கனவே, 27 சதவீத ஒதுக்கீட்டையே வழங்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த முடியாது&' என, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அமல்படுத்த முடியாதுஅப்போது, தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் மத்திய அரசு சார்பில் கூறப்பட்டதாவது:நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள், இந்தாண்டு, ஜன., - பிப்., மாதத்தில் பெறப்பட்டன. அப்போது, அவர்கள் எந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கிறோம் என்பதை தெரிவித்துள்ளனர். அதன்படியே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு உள்ளன.அதனால், இந்தக் கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கான, 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டது.விசாரணைஇந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, &'இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது&' என, உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து, மருத்துவப் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில், ஓ.பி.சி., பிரிவினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தலைவர்கள் கருத்து&'மருத்துவப் படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு தர முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஏமாற்றம் அளிக்கிறது&' என, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்வியிடங்களில், இந்த ஆண்டே, 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என, பிரதமர் மோடியை கேட்டுக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய வகுப்பினர், இட ஒதுக்கீட்டில் காட்டிய அவசரத்தை, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்காகவும், பட்டியலின சமூகத்திற்காகவும், பிரதமர் காட்ட வேண்டும் என, நாடு எதிர்பார்க்கிறது; பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பால், தமிழகத்தில் இருந்து, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும், 251 மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவருக்கு கூட, இடம் கிடைக்காத நிலை, உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்டுள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டதற்கு, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எடுத்த நிலையும், இந்த வழக்கை அலட்சியப் போக்குடன் நடத்திய, அ.தி.மு.க., அரசும் தான் காரணம்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான, &'ஆன்லைன்&' கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும். அடுத்த சில நாட்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுத்து, உடனே செயல்படுத்த, மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசு நினைத்தால், இது சாத்தியம் தான். இந்தக் கோரிக்கையை தமிழகத்தில் இருந்து, அனைத்து கட்சித் தலைவர்கள் குழுவை, டில்லிக்கு அழைத்து சென்று, பிரதமரை சந்தித்து வலியுறுத்த, முதல்வர் இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும்.ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரான, பெரும் அதிர்ச்சி அளிக்கின்ற தீர்ப்பு.இந்த பிரச்னையில், மத்திய அரசு துவக்கத்தில் இருந்தே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வஞ்சக போக்கை மேற்கொண்டு வந்தது கண்டிக்கத்தக்கது.த.மா.கா., தலைவர் வாசன்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, எதிர்பார்ப்பிற்கு மாறாக, மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. கல்வி குறித்து எடுக்கும் எந்த முடிவானாலும், மத்திய, மாநில அரசுகள் காலதாமதமின்றி, மாணவர்கள் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும். இதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தும் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.