உள்ளூர் செய்திகள்

ஜுலை 8ல் பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவ சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மூலம் நடத்துகிறது. அதன்படி, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 8ம் தேதி துவங்கி சுமார் ஒரு மாதங்களுக்கும் மேல் நடைபெறுகிறது. ஜுலை 8ம் தேதி காலை 9 மணிக்கு 199.75 கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கும், 3 மணிக்கு 199.50 கட்-ஆப் மதிப்பெண் எடுத்தவர்களும், 4.30 மணிக்கு 199.25 கட்-ஆப் மதிப்பெண்ணிற்கும், 6 மணிக்கு 199.00 கட்-ஆப் மதிப்பெண்ணிற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. கடிதங்கள் பெறாத மாணவர்களும், அவர்களது கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு ஏற்ற நாளில் கலந்தாய்வில் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்