ஸ்ரீரங்கத்தில் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கத்தில், நாளை மறுதினம் (8ம் தேதி), வேலை வாய்ப்புத் துறை சார்பில், தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், 8ம் தேதி முகாம் நடைபெறுகிறது. முகாமில், 92 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில், 9,000 பேருக்கு, வேலை வாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிகிரி படித்த, அனைவரும் கலந்து கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை, வேலை வாய்ப்பு துறையினர் செய்து வருகின்றனர்.