உள்ளூர் செய்திகள்

10 நாளால் சட்டப் படிப்பு போச்சு: பரிசீலிக்க கோரிய மனு தள்ளுபடி

மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர்வதற்கு சவுகத் அலி என்பவர் விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பத்தை சட்டப் பல்கலைக்கழகம் நிராகரித்தது. சட்டப் படிப் பில் சேர நிர்ணயிக்கப்பட்ட 30 வயதை தாண்டியுள்ளதால், இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனது விண்ணப் பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் சவுகத்அலி மனு தாக்கல் செய்தார். அதில், எனக்கு 30 ஆண்டுகள் 10 நாட்கள் ஆகிறது. 10 நாட்கள் அதிகம் என்பதால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. சட்டம் படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனவே, விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.   அம்பேத்கர் சட்டப் பல்கலை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், விண்ணப்பதாரர் 2009ம் ஆண்டு, ஜூன் 1ம் தேதியன்று 30 வயது பூர்த்தியடைந்திருக்கக் கூடாது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வயதை மனுதாரர் கடந்து விட்டதால், அவரை பரிசீலிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.   மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: இதேபோன்ற ஒரு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது குறித்து எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. பார் கவுன்சில் விதிகளின்படி, வயது வரம்பை தளர்த்த முடியாது என முடிவெடுக்கப்பட்டிருந்தால், அதை இந்த கோர்ட்டும் பின்பற்றி மனுவை தள்ளுபடி செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. பல பரிந்துரைகளை நீதிபதி கூறியுள்ளார்.   அவற்றில் சில, பார் கவுன்சில் நிபந்தனைகளில் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உத்தரவாதங்களை, பரிந்துரைகள் மூலம் குறுக்கிட முடியாது. கல்வி விஷயத்தில் பரிந்துரைகள் வழங்க கோர்ட்டுக்கு தகுதியில்லை என கருதுகிறேன். கல்வியாளர்கள், நிபுணர்களின் முடிவுக்கு இந்த விஷயத்தை விட்டு விட வேண்டும். இந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்