உள்ளூர் செய்திகள்

10, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மெயின் சீட் பக்கங்களை குறைக்க உத்தரவு

சிவகங்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் தொகுப்பு (மெயின் சீட்) பக்கங்களை குறைக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 40 முதல் 56 பக்கங்களை கொண்ட விடைத்தாள் வழங்கப்பட்டது. மாணவர்கள் பலர் குறைவான பக்கங்களில் விடை அளித்திருந்தனர்; அதிக பக்கங்கள் வீணாகின. இந்த ஆண்டு விடைத்தாள் தொகுப்பில் பக்கங்கள் குறைக்கப்பட உள்ளன. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களிடம் ஆலோசனை பெற்றோம். இதன்படி பக்கங்களை குறைத்துள்ளோம். பிளஸ் 2விற்கு 38 முதல் 48 பக்கம்; பத்தாம் வகுப்பிற்கு 24 பக்கங்கள் இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்