10, 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு அறிவிப்பு: பிப்.,15ல் தேர்வுகள் துவக்கம்
புதுடில்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் பிப்.,15ம் தேதி முதல் துவங்குகிறது.சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகள் எப்போது பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்நிலையில், இன்று (டிச.,12) 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிட்டது.அதன்படி, 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அடுத்தாண்டு (2024) பிப்ரவரி 15ம் தேதி துவங்குகிறது. 12ம் வகுப்புக்கு ஏப்ரல் 2ம் தேதியுடனும், 10ம் வகுப்புக்கு மார்ச் 13ம் தேதியுடனும் தேர்வுகள் முடிவடைகிறது.