உள்ளூர் செய்திகள்

1,166 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவர்; வசதி இல்லாததால் தவிப்பு

பெ.நா.பாளையம்: பேளூர், கரடிப்பட்டியை சேர்ந்த மாணவர் பாரதி, பிளஸ் 2 தேர்வில், 1,166 மதிப்பெண்கள் பெற்றும், மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க வசதியில்லாமல் தவித்து வருகிறார். சேலம் மாவட்டம், பெத்தநாய்க்கன்பாளையம் அருகே, பேளூர் கரடிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி பூபதி. அவரது மகன் பாரதி, பிளஸ் 2 தேர்வில், 1,166 மதிப்பெண் பெற்றார். ஆனால், தற்போது மேற்படிப்பு படிக்க வசதி இல்லாமல், தவித்து வருகிறார். இதுகுறித்து, மாணவர் பாரதி கூறியதாவது: என் தந்தை பூபதி, கூலி தொழில் செய்கிறார். தாய் கல்பனா, ஏழு ஆண்டுகளாக, சர்க்கரை நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் படித்த நான், பத்தாம் வகுப்பில், 488 மதிப்பெண் பெற்றதால், அந்தியூர் ஐடியல் மேல்நிலைப்பள்ளியில் இலவசமாக படிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது, பிளஸ் 2வில், தமிழ் - 193, ஆங்கிலம் - 189, இயற்பியல் - 194, வேதியியல் - 199, உயிரியல் - 191, கணிதம் - 200 என, 1,166 மதிப்பெண் பெற்றுள்ளேன். எனக்கு, மருத்துவம் அல்லது விவசாயம் படிக்க விருப்பம். ஆனால், குடும்ப சூழ்நிலையால், படிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், மேற்படிப்பு என்பது, கனவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனக்கு யாராவது உதவினால், அவர்களுக்கு நன்றிக்கு உரியவனாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். ஏழை மாணவனின் படிப்புக்கு உதவ நினைக்கும், நல்ல உள்ளம் கொண்டவர்கள், அவரது மொபைல் எண்: 84898 32341ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்