உள்ளூர் செய்திகள்

12வது ஆண்டாக அரசு பள்ளி மாணவர் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஆஜர்

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம் வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், 6, 7, 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், 151 பேர், ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு, அழைத்து செல்லப்பட்டனர்.இந்த வகையில் தொடர்ந்து, 12வது ஆண்டாக மாணவர்கள் வந்தனர். இதில், 50க்கு மேற்பட்ட மாணவர்கள், 250 ரூபாய்க்கும் மேல் புத்தகங்கள் வாங்கினர். புத்தக திருவிழாவில் கோடை பண்பலை வானொலியில், மாணவர்கள் நேரடி ஒலிபரப்பில் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்