உள்ளூர் செய்திகள்

12ம் நுாற்றாண்டு கல்வெட்டு பாலாற்றில் கண்டெடுப்பு

மாமல்லபுரம்: செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று பகுதியில், பழங்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களான ராஜராஜன், பல்லவர் செப்பு நாணயங்கள், ஆபரணங்கள் மற்றும் உடைந்த மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.திருக்கழுக்குன்றம் அடுத்த ஈசூர் பாலாற்றில், சோழர் கால கோவிலுக்கான கல்வெட்டை, தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செய்யாறு அரசு கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் கூறியதாவது:ஈசூர் பாலாற்றின் கரையில், பழங்கால சிறிய சிவபெருமான் கோவில் உள்ளது. அதற்கு சற்று தொலைவில் உள்ள ஆற்றுப் பகுதியில் சிறிய கற்பலகை பாசி படிந்து கிடந்தது. தற்போது வெயிலில் பாசி உதிர்ந்து, அதிலுள்ள பழங்கால தமிழ் எழுத்துகள் வெளியே தெரிந்தன. இந்த கற்பலகை பாதி உடைந்ததாக உள்ளது.இந்த கற்பலகை கி.பி.12ம் நுாற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்தது. இதில், களத்துார் கோட்டத்து, தம் உழக்கு உள்ளிட்ட வார்த்தைகள் உள்ளன. கோவிலில் விளக்கு ஒளிர, தானமாக எண்ணெய் அளித்த தகவல் உள்ளது.இந்நிலையில், பாதி உடைந்த கல்வெட்டு என்பதால், முழுமையாக அறிய முடியவில்லை. எந்த கோவிலின் கல்வெட்டு என்பதும் தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்