உள்ளூர் செய்திகள்

1300 பள்ளிகளைக் கட்டும் அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன்

பெங்களூரு: நாடு முழுவதும் ரூ. 9 ஆயிரம் கோடி செலவில் 1300 பள்ளிகள் கட்டப்படும் என விப்ரோ நிறுவனத் தலைவர் அசிம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார். அவரது அசிம்பிரேம்ஜி பவுன்டேஷன் சார்பில் மாவட்டத்திற்கு 2 பள்ளிகள் வீதம் வரும் 2025ம் ஆண்டிற்குள் 1300 பள்ளிகள் கட்டப்படும். பிரி கேஜி முதல் 12ம் வகுப்பு வரை நடத்தப்படவுள்ள இந்த பள்ளிகளில், அந்தந்த மாநில மொழிகளில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இங்கு பயிலும் மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்