15 இன்ஜி., கல்லுாரிகளில் சேர்க்கை நிறுத்தம்
சென்னை: அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் ஆண்டு தோறும், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள், மீண்டும் மீண்டும் புதிய மாணவர்களை சேர்க்க வேண்டாம் என, அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.இதன்படி, கடந்த ஆண்டில் மாணவர் எண்ணிக்கை, 20க்கும் கீழே குறைந்த, 15 இன்ஜினியரிங் கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன. இந்த கல்லுாரிகளில், தற்போது படிக்கும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி விட்டு, கல்லுாரியின் வகையை மாற்ற உள்ளதாக, அண்ணா பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.