16 வயதில் சி.ஏ., தேர்ச்சி; இந்திய மாணவர் கின்னஸ் சாதனை
துபாய்: துபாயில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த லட்சுமணன் மெய்யப்பன் என்ற மாணவர் 16 வயதில் சி.ஏ., பட்டம் முடித்து கின்னஸ் சாதனை படைத்து உள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமணன் மெய்யப்பன் (16 ஆண்டு 141 நாட்கள்) துபாயில் வசித்து வருகிறார். 10ம் வுகுபு்பு முடித்த போது, விடுமுறை காலத்தை பயன் உள்ளதாக மாற்ற முடிவு செய்தார். அப்போது கோவிட் பெருந்தொற்றும் பரவிய காலம். இதனால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் அக்கவுண்ட்டிங் படிப்பில் கவனம் செலுத்தினர். இதற்கு அவரது தாயாரும் உதவினார். அவரும் சி.ஏ., முடித்தவர். மகனுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார்.ஏ.சி.சி.ஏ., படிப்பை முடித்த பிறகு நிதித்துறையில் மிக உயரிய படிப்பாக கருதப்படும் சி.எஃப்.ஏ., முடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது நிதித்துறையில் முதுநிலை படிப்பு படித்து வருகிறார். மேலும், துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில், முதுநிலை ஆராய்ச்சி நிபுணர் ஆக பணியாற்றி வருகிறார். அவரது சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.