18 மாத குழந்தைக்கு சாதனை விருது
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 18 மாத குழந்தைக்கு கலாம் உலக சாதனைகள் அமைப்பினர் சிறந்த குழந்தைக்கான விருது வழங்கினர்.நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார், ஐ.டி., நிறுவன ஊழியர். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களது 18 மாத பெண் குழந்தை காருண்யா, பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கி வருகிறார். இரண்டு நிமிடத்தில் காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் என, 120 பெயர்களை கூறி சாதனை படைத்துள்ளார்.இதற்காக, கலாம் உலக சாதனை நிறுவனம் சார்பில் சிறந்த திறமைமிக்க குழந்தையாக காருண்யா தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடந்த விழாவில் காருண்யாவுக்கு பதக்கம், சான்றிதழ், சிறந்த திறமையான குழந்தைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இக்குழந்தை, இதற்கு முன்பு, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பிலும் சாதனைக்கான விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.