19 பேருக்கு தமிழ் செம்மல் விருது
சென்னை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 2019ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுக்கு தேர்வான, 37 பேரில், வத்சலா சேதுராமன் உட்பட, 19 பேருக்கு, நேற்று தமிழ் செம்மல் விருதுகளை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்கி, பாராட்டினார்.தமிழ் வளர்ச்சிக்காக, தனி ஆளாகவும், அமைப்பு ரீதியாகவும், மாவட்டந்தோறும் ஒருவரை தேர்வு செய்து, ஆண்டுதோறும் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருதில், ௨௫ ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் தகுதி உரை வழங்கப்படும்.இதன்படி, ௨௦௧௯ம் ஆண்டுக்கு, மாவட்டத்திற்கு ஒருவர் என, 37 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.யார் யார்?சென்னை - செல்லம்மாள்; திருவள்ளூர் - மரியதெரசா; காஞ்சிபுரம் - ஸ்ரீகுமார்; வேலுார் - லக்குமிபதி; கிருஷ்ணகிரி - ராசு; திருவண்ணாமலை - செல்வகுமார்; விழுப்புரம் - கோவிந்தராசன்; கடலுார் - கார்த்திகேயன்; பெரம்பலுார் - மாய கிருட்டிணன். அரியலுார் - சேகர்; சேலம் - முத்துமாரய்யன்; தர்மபுரி - ராமமூர்த்தி; நாமக்கல் - சுப்பண்ணன்; ஈரோடு - பழனிசாமி; கரூர் - இளவரசி; கோவை - ஞானமணி; திருப்பூர் - முத்துசுப்ரமணியன்; நீலகிரி - சபீதா போஜன்; திருச்சி - அந்தோணி துரைராஜ்; புதுக்கோட்டை - ஞானசுந்தரத்தரசு. சிவகங்கை - பகீரத நாச்சியப்பன்; தஞ்சாவூர் - நெடுஞ்செழியன்; திருவாரூர் - கல்யாணராமன்; நாகப்பட்டினம் - சிவசங்கரன்; ராமநாதபுரம் - அப்துல்சலாம்; மதுரை - சங்கரலிங்கம்; திண்டுக்கல் - இளங்கோவன்; தேனி - நாகராசன்; விருதுநகர் - இளவரசு; திருநெல்வேலி - அழகிரிபாண்டியன். துாத்துக்குடி - சீனிவாசன்; கன்னியாகுமரி - குமரிஆதவன்; திருப்பத்துார் - கருணாநிதி; செங்கல்பட்டு - வத்சலா சேதுராமன்; ராணிப்பேட்டை - தினகரன், தென்காசி - உமாகல்யாணி; கள்ளக்குறிச்சி - அறிவழகன் என, 37 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.பங்கேற்புஇவர்களில், 19 பேருக்கு, நேற்று தலைமை செயலகத்தில், &'தமிழ் செம்மல்&' விருது, 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரையை, முதல்வர் இ.பி.எஸ்., வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயகுமார், அன்பழகன், பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். &'மற்றவர்களுக்கு, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில், மற்றொரு நாளில், அமைச்சர்கள் விருதுகள் வழங்குவர்&' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.