உள்ளூர் செய்திகள்

28ம் தேதி கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, வரும் 28ம் தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகின்றன.இதில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.முகாம், சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை வளாகத்தில், காலை 08:00 முதல் 03:00 மணி வரை நடக்கிறது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு என, தகுதியின் அடிப்படையில் வேலை வழங்கப்படும்.பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாகவோ அல்லது ஆன்லைன் முறையில், https://forms.gle/x48Nu8uZAj3qF8Pc7 என்ற படிவத்தில் பூர்த்தி செய்யலாம் என, கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்