சுகாதாரத்துறையில் பணியிடங்கள்: 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
கோவை: கோவை மாவட்டத்தில், மாவட்ட சித்த மருத்துவமனை, மக்களைத்தேடி மருத்துவம், நடமாடும் மருத்துவ மையம், துணை சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ஆயுஷ் மருத்துவர் (சித்தா), மருந்து வழங்குனர் (சித்தா), ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி), மருந்து வழங்குனர் (யுனானி), பல்நோக்கு பணியாளர், சிகிச்சை உதவியாளர் (பெண்), திட்ட மேலாளர், தரவு உதவியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், இடைநிலை சுகாதார பணியாளர், இயன்முறை மருத்துவ நிபுணர், மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், செவிலியர், பல் மருத்துவ அலுவலர், பல் மருத்துவ உதவியாளர் என, 55 பணியிடங்கள் முற்றிலும், தற்காலிகமாக ஒப்பந்த முறையில், தொகுப்பூதியத்தில், மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.இதற்கான விண்ணப்பம், கூடுதல் விபரங்களை, https://coimbatore.nic.inல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, அனைத்து சுயஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 20ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், ரேஸ்கோர்ஸில் உள்ள பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கொடுக்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.