உள்ளூர் செய்திகள்

34 ஏ.இ.இ.ஓ., விரிவுரையாளர்கள் விரைவில் தேர்வு

இதற்கான விண்ணப்பங்கள், நவ., 2 முதல் 19ம் தேதி வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கிடைக்கும்.தொடக்க கல்வித் துறையில் உள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,) பணியிடம், மிகவும் முக்கியமானது. ஒரு மாவட்டம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பு, இந்த அலுவலர்களிடம் உள்ளது. இங்கு ஏற்படும் காலிப் பணியிடங்கள், 70 சதவீதம் பதவி உயர்வு மூலமும், 30 சதவீதம் நேரடி போட்டித் தேர்வு மூலமும் நிரப்பப்படுகிறது. அதன்படி, 34 உதவி தொடக்க கல்வி அலுவலர்களை, போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அல்லது நாளை வெளியிட உள்ளது. இதேபோல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் காலியாக உள்ள, 34 முதுநிலை விரிவுரையாளர்களை நிரப்பவும், ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்த உள்ளது. இதுகுறித்த அறிவிப்பும், ஏ.இ.இ.ஓ., தேர்வுடன் சேர்த்து அறிவிக்கப்பட உள்ளது. தேர்வெழுத தகுதி : உதவி தொடக்க கல்வி அலுவலர் - பி.எட்.,முதுநிலை விரிவுரையாளர் - முதுகலை பட்டப்படிப்புடன், எம்.எட்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்