உள்ளூர் செய்திகள்

370 எம்.பி.பி.எஸ்., சீட் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

புதுச்சேரி: இதன் மூலம் 370 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் இந்தாண்டு அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளன.பிம்ஸ் மருத்துவ கல்லுாரி யில் மொத்தம் 150 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் உள் ளன. இதில் அரசு ஒதுக் கீடாக 56 சீட்டுகள் இந் தாண்டு பெறப்பட்டுள்ளது. இக்கல்லுாரியில் நிர்வாக சீட்டுகளை பொறுத் தவரை 75 சீட்டுகள் புதுச்சேரியை சேர்ந்த கிறிஸ்துவ மாணவர்களுக்கும், 19 சீட்டுகள் என்.ஆர்.ஐ., மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியை பொருத்தவரை மொத்தமுள்ள 250 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் 91 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளது.இக்கல்லுாரியில் நிர்வாக இடங்களை பொருத்தவரை 38 சீட்டுகள் என்.ஆர்.ஐ., மாணவர்களுக்கும், 121 சீட்டுகள் இதர மாணவர்களுக்கும் இந்தாண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் மொத்தமுள்ள 250 சீட்டுகளில் 92 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள நிர்வாக இடங்களில் 120 சீட்டுகள் புதுச்சேரியை சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் மாணவர்களுக்கும், 38 சீட்டுகள் என்.ஆர்.ஐ., மாண வர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தனியார் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 650 சீட்டுகளில் 239 சீட்டுகள் அரசு ஒதுக்கீடாகவும் நிரப்பப்படுகின்றது. நிர்வாக இடங்களில், 195 சீட்டுகள் சிறுபான்மை மாணவர்களுக்கும், 95 சீட்டுகள் என்.ஆர்.ஐ., மாண வர்களுக்கும், 121 சீட்டுகள் இதர மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இட ஒதுக்கீடு விபரம்:பிம்ஸ் மருத்துவமனையில் மொத்தமுள்ள 56 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பொது 28, ஓ.பி.சி., 6, எம்.பி.சி., 10, எஸ்.சி., 9, மீனவர் 1, முஸ்லீம் 1, பி.டி, 1 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 6, மாற்று திறனாளி 3, விடுதலை போராட்ட வீரர் 3 உள் ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளது.மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் மொத்தமுள்ள 91 அரசு ஒதுக்கீட்டு இடங்களில், பொது 46, ஓ.பி.சி., 10, எம்.பி.சி., 16, எஸ்.சி., 14, மீனவர் 2, முஸ்லீம் 2, எஸ்.டி., 1 என்ற இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்படுகின்றது.இதில் அரசு பள்ளி மாண வர்களுக்கு உள் ஒதுக்கீடாக 9, மாற்றுதிறனாளி 4, விடுதலை போராட்ட வீரர் 4, முன்னாள் ராணுவ வீரர் 1, விளையாட்டு வீரர் 1 என்ற உள்ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது.வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரியில் மொத்த முள்ள 92 சீட்டுகளில் பொது 46, ஓ.பி.சி., 10, எம்.பி.சி., 17, எஸ்.சி., 15, மீனவர் 2, முஸ்லீம் 2 என்ற இட ஒதுக்கீடு அடிப் படையில் நிரப்பப்படுகின்றது.இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 9, மாற்று திறனாளிகள் 5, விடுதலை போராட்ட வீரர் 3, முன்னாள் ராணுவ வீரர் 1, மாற்றுதிறனாளிகள் 1 என்ற அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்