உள்ளூர் செய்திகள்

39 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலை: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

புதுடில்லி: எல்லை பாதுகாப்பு படை, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.பி., உள்ளிட்ட மத்திய படைகளில் 39,481 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப ஸ்டாப் செலக்சன் கமிஷன் (எஸ்.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை, நார்காடிக் கன்ட்ரோல் பீரோ, அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட படைகளுக்கும் ஆட்சேர்க்கை நடத்தப்படுகிறது.என்.சி.சி., சான்றுக்கு போனஸ்கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு மட்டுமே. ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 14 ஆகும். என்.சி.சி., சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு போனஸ் மதிப்பெண் உண்டு.தேர்வு மையங்கள்இதற்கென நாடு முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. புதுச்சேரியிலும், தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலுாரிலும் தேர்வு மையங்கள் உண்டு.கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது.இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள், உடற்திறன் தேர்விலும் மருத்துவ பரிசோதனையிலும் வெற்றி பெற வேண்டும். இறுதியாக சான்றிதழ்கள் சரி பார்க்கப்படும்.உடற்திறன் தேர்வுஉடற்திறன் தேர்வு என்பது ஆண்கள், 5 கிலோமீட்டர் துாரத்தை 24 நிமிடங்களில் ஓடிக்கடக்க வேண்டும். பெண்கள் 1.6 கிலோமீட்டர் துாரத்தை எட்டரை நிமிடத்தில் ஓடிக்கடக்க வேண்டும் என்று ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவித்துள்ளது.மேலும் விவரங்களுக்கு: https://ssc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்