உள்ளூர் செய்திகள்

தினமலர் - பட்டம் இதழ் சார்பில் வினாடி - வினா: உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக்., மாணவர்கள் அசத்தல்

உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி - வினா போட்டி, உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.மாணவர்களின் கற்றல் திறன், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 2018ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான போட்டியின் ஒரு பகுதியாக, உடுமலை ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் வினாடி - வினா நடந்தது. சத்யா ஏஜன்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் ஆகிய நிறுவனங்கள் பரிசு பொருட்களை வழங்கும் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளன.நேற்று நடந்த தகுதிச்சுற்றில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை படிக்கும், 100 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர்.இதில், அதிக மதிப்பெண் பெற்ற, மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.மூன்று சுற்றுகளாக நடந்த இறுதிப்போட்டியில், 'ஜி' அணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகள் ரக்சனா, தானியாஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர்.இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள், சான்றிதழ்களை பள்ளி முதல்வர் சகுந்தலா ரங்கராஜன் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் கதிஜா, ஆசிரியர் ஆதிரை ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்துள்ள, 160க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.முதலிடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும். அதில் இருந்து தேர்வாகும் எட்டு அணிகள் பங்கேற்கும் இறுதி போட்டி ஒரே இடத்தில் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.மாணவர்களின் நண்பன்பள்ளி முதல்வர் சகுந்தலா ரங்கராஜன் கூறியதாவது: 'தினமலர் பட்டம்' இதழ், மாணவர்களின் பகுத்தறிவையும், படிப்பறிவையும், ஒரு சேர இணைத்து, சிந்தனைகளை செம்மைப்படுத்தி தன்னம்பிக்கையோடு தனித்திறமைகளை வெளிக்கொணர்கிறது.வாசித்தல் திறனை மாணவர்களிடம் வளர்த்தெடுக்க உதவுகிறது. உலகளாவிய அறிவுத்திறன் சார்ந்த விஷயங்களை அன்றாடம் மாணவர்களிடையே சேர்க்கும் அரிய பொக்கிஷமாக பட்டம் இதழ் உள்ளது.பொது அறிவு, ஆய்வியல், அறிவியல், சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை மாணவர்களிடம் விழிப்புணர்வோடு விவரிக்கிறது. எதிர்கால அறிவியல் வளர்ச்சியோடு போட்டிபோட்டு செயல்பட துாண்டுகிறது.மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த 'தினமலர்' நாளிதழுக்கு பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு, தெரிவித்தார்.திறன்கள் மேம்படும்மாணவி ரக்சனா: தினமலர் 'பட்டம்' இதழை நாள்தோறும் வாசிக்கிறேன். பொது அறிவு வளர்ச்சி, கதை எழுதும் திறன், வாசிப்புத்திறன், எழுத்துப்பிழை குறைதல், ஒழுக்கம், தன்னம்பிக்கை அதிகரிக்கும் மாற்றத்தை உணர்ந்தேன்.எதிலும் கணிதம் என்ற பகுதி, என்னை கணிதத்தின் உண்மையான சிறப்பை உணர வைத்தது. தினமும் படிப்பதால், எங்கள் பொது அறிவு வளர்கிறது. பொது அறிவு மற்றும் திறன் மேம்பாட்டுக்கு பட்டம் இதழ் பெரிதளவில் உதவுகிறது.தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும் வகையில், மாணவர்களுக்காக சிறப்பான முறையில் 'பட்டம்' இதழ் வெளியாகி வருகிறது.மாணவி தானியாஸ்ரீ: 'பட்டம்' இதழ் மாணவர்களுக்கு அறிவையும், வாசிப்பு திறனையும் வளர்ப்பதில் சிறப்பான பங்கு வகிக்கிறது. வெளியாகும் செய்திகள், தகவல்கள், வினாடி - வினா வினாக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.படிப்பதோடு மட்டுமல்லாமல், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் ஆர்வத்தை துாண்டுகிறது. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளை வழங்கும் பட்டம் இதழுக்கு மனமார்ந்த நன்றிகள். தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, பொது அறிவு, உடல் நலம் சார்ந்த செய்திகள் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்