600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
வேலுார்: &'&'காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்&'&' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜனார்த்தனன் கூறினார்.வேலுாரில் அவர் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 50 சதவீதம் தொகுப்பூதிய பணிக்காலத்தை ஓய்வூதியம் பெற கணக்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.