உள்ளூர் செய்திகள்

6,574 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு அறிவிப்பு!

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 6,574 'குரூப் 4' பணியிடங்களுக்கு, 2027 ஜன.,10ம் தேதி தேர்வு நடக்கும் என, அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளான, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டர், வரி வசூலிப்போர், தட்டச்சர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட காலியாக உள்ள 6,574 'குரூப் 4' பணியிடங்களுக்கு, 2027ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தேர்வு நடக்க உள்ளது.இதற்கான விண்ணப்பம் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நவ., 5ம் தேதி, பகல் 11:59 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அடுத்தாண்டு, ஜன.,10ம் தேதி காலை 09:30 முதல் பகல் 12:30 மணி வரை தேர்வு நடக்கும்.மேலும், விண்ணப்பதாரர்கள், www.tnpscexams.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்