உள்ளூர் செய்திகள்

பிறரிடம் காட்டும் அன்பால் நம் மனம் ஆனந்தமாகும் அன்னை தெரசா பல்கலை பதிவாளர் பேச்சு

பெரியகுளம்: பிறரிடம் காட்டும் அன்பால் நம் மனம் ஆனந்தப்படும் என அன்னை தெரசா மகளிர் பல்கலை., பதிவாளர் ஷீலா பேசினார்.பெரியகுளம் அருகே கைலாசபட்டி திரவியம் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா தாளாளர் டாக்டர் பாண்டியராஜ் தலைமையில் நடந்தது. செயலாளர் டாக்டர் ஹேமலதா, இயக்குனர் டாக்டர் இமானுவேல் ஜூடா முன்னிலை வகித்தனர். திரவியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பட்டம்மாள், கல்வியல் கல்லூரி முதல்வர் சரோஜா, செவிலியர் கல்லூரி முதல்வர் கவிதா வரவேற்றனர். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி சமூக நலத்திட்டங்கள், அரசு வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பு குறித்து பேசினார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை பதிவாளர் ஷீலா பேசுகையில், பிறரிடத்தில் குற்றம் காணத் துவங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது என்ற அன்னை தெரசாவின் சொல்லிற்கு இணங்க நாம் மற்றவர்களிடம் அன்பு செலுத்தினால் மனம் ஆனந்தப்படும், என பேசினார். 2023- 2024 கல்வியாண்டில் பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் , புத்தகங்கள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பதிவாளர் சரவணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்