| ADDED : ஜூன் 02, 2024 01:14 AM
தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., என இரண்டுமே மற்ற கட்சிகளிடம் பெரியண்ணன் போலவே நடந்து கொள்கின்றன; இதில் பாதிக்கப்படுவது மாநிலத்தில் இயங்கும் சிறிய கட்சிகள் தான்.இப்படிப்பட்ட சிறிய கட்சிகளுக்கு பெரும் நெருக்கடியை, பா.ஜ., இப்போதே தர ஆரம்பித்து விட்டதாம். த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி சண்முகம் ஆகியோரிடம், 'உங்கள் கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து விடுங்கள்; அப்படி இணைத்து விட்டால் அமைச்சர் பதவி' என, ஆசை காட்டுகின்றனர், பா.ஜ., தலைவர்கள்.த.மா.கா., இணைந்தால் வாசனுக்கு கேபினட் அமைச்சர் பதவி என்கின்றனராம். வட மாநிலங்களில், பா.ஜ., கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுக்கும் இதே நிலை தானாம். உ.பி.,யில் அப்னா தள் என்கிற கட்சி நடத்தி வரும், அனுபிரியா பட்டேல் தற்போது வணிகத்துறையில் இணை அமைச்சராக உள்ளார்.இவருடைய கட்சியையும் இணைத்துக் கொள்ள, பா.ஜ., தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனராம்.