உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்...! மாறும் பிரதமர் அலுவலகம்!

டில்லி உஷ்ஷ்ஷ்...! மாறும் பிரதமர் அலுவலகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பிரதமர் மோடி, சமீபத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, அரசு துறைகளின் செயலர்களை தனியாக சந்தித்தார். இந்த இரண்டு சந்திப்பிலும், 'எல்லா விஷயங்களுக்கும் பிரதமர் அலுவலகத்தை எதிர்பார்க்காதீர்கள்; அரசு நடத்த உங்களுடைய ஐடியாக்களை கொடுங்கள்' என, அமைச்சரகளுக்கும், அதிகாரிகளுக்கும், 'அட்வைஸ்' அளித்துள்ளாராம் மோடி.முன்பெல்லாம் பிரதமர் அலுவலகம் தான், திட்டங்களை செயல்படுத்த சொல்லும்; ஆனால், இப்போது நிலைமை மாறி விட்டதாக கூறப்படுகிறது. 'அமைச்சர்கள் புதிய திட்டங்களுடன் வர வேண்டும். நாட்டை நடத்துவது பிரதமர் அலுவலகம் என்கிற எண்ணம் வரக் கூடாது. பிரதமர் அலுவலகம், மக்களின் அலுவலகமாக செயல்பட வேண்டும்' என, கண்டிப்புடன் சொல்லி விட்டாராம் மோடி.பிரதமர் பதவியேற்றவுடன், டில்லி சவுத் ப்ளாக்கில் உள்ள தன் அலுவலகம் சென்ற மோடியை, அனைத்து ஊழியர்களும் வரவேற்றனர். அப்போது, 'பிரதமர் ஆபீஸ் என்பது, மக்களின் அலுவலகமாக செயல்பட வேண்டும்' என, பேசினார் மோடி.அதை இப்போது செயல்படுத்த ஆரம்பித்து விட்டாராம். 'பிரதமரின் அலுவலகம், மிகவும், 'பவர்புல்' ஆனது' என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பது மோடியின் விருப்பமாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

G.Jeyaprakash.
ஜூலை 11, 2024 14:23

மக்களின் எந்த கோரிக்கையும். விண்ணப்பத்தையும் பிரதமர் அலுவகமும் / அலுவலர்களும் பார்த்து பதில் அனுப்புவது இல்லை.


Thiyagarajan S
ஜூலை 08, 2024 14:52

நம்ம தமிழிசை அக்கா மறுபடியும் கவர்னர் கொடுங்கன்னு போட்டி போட போகுது.. .. வேஸ்ட் வேஸ்ட் வேஸ்ட்....


venugopal s
ஜூலை 07, 2024 22:43

மாற்ற வேண்டியது பிரதமர் அலுவலகத்தை அல்ல! பிரதமரையே!


jaya
ஜூலை 12, 2024 11:26

என்ன பண்ண , ஆசை தான் ...ஒன்னும் முடியலையே


Sridhar
ஜூலை 07, 2024 13:06

எது செய்யறீங்களோ என்னமோ, முதல்ல திருட்டு கும்பல் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை சற்றும் சமரசம் செய்துகொள்ளாமல் கடுமையாக உடனே எடுங்கள். 2G நில அபகரிப்பு பதிவுத்துறை சாராயம் மணல் கொள்ளை கஞ்சா என பல்வேறு குற்ற செயல்களால் தமிழகம் நாறி நாசமாய் போய் கொண்டிருக்கிறது ராவுல் சோனியா போன்றவர்களை அன்புக்கரம் கொண்டு தண்டிக்காமல் விட்டுவிட்டதை போன்று எங்க ஊரு திருடர்களையும் விட்டுவிடாதீர்கள். அப்படி விட்டீர்கள் என்றால் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவ்வளவு ஊழல்கள் செய்தும் அவர்களுக்கே வோட்டுப்போட்ட தமிழக மக்களுக்கு இந்த ஆட்சியே தண்டனையாக இருக்கட்டும் என்று நினைத்து சும்மா இருந்தீங்கன்னா, தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை மறக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். ஆகவே உடனே அதிரடி நடவடிக்கைகள் தேவை. தமிழகத்தின் நல்ல மக்கள் காத்திருக்கிறோம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை