உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அதிகரிக்கிறது ஆன்லைன் மோசடி: 8 மாதத்தில் ரூ.73 கோடி போச்சு

அதிகரிக்கிறது ஆன்லைன் மோசடி: 8 மாதத்தில் ரூ.73 கோடி போச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: இந்தாண்டு துவக்கம் முதல் ஆக., மாதம் வரை 73 கோடி ரூபாயை கோவை மக்கள் ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.ஆன்லைன் வாயிலாக பண மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை கண்டறிவது, போலீசாருக்கும் சவாலாக உள்ளது. இணைய வழியில் பலர் தங்களின் பணத்தை இழக்கின்றனர்.படிப்பறிவு, விழிப்புணர்வு இல்லாதவர்களிடம், 'ஏ.டி.எம்., கார்டு புதுபிக்க வேண்டும் என்பதில் தொடங்கி, ஆன்லைன் டிரேடிங், பெடெக்ஸ் என புது புது மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலரின் பேராசை அவர்களை மோசடி வலையில் சிக்க வைக்கிறது. இந்நிலையில், கோவையை சேர்ந்த பலரிடம் ஆன்லைன் மோசடி கும்பல் பல கோடி ரூபாயை பறித்திருப்பது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ஐ.டி., நிறுவன ஊழியரிடம் 1.63 கோடி ரூபாய் மோசடி செய்தனர். அதேபோல், ராமநாதபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம், சட்ட விரோத பார்சல் வந்துள்ளதாக கூறி, ரூ. 2.3 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.கோவையில் கடந்த ஜன., முதல் ஆக., 26ம் தேதி வரை (எட்டு மாதங்களில்) சுமார், 73 கோடி ரூபாய் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. மொத்தம், 5319 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 217 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு, 31 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ஆறு குற்றவாளிகள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. சுமார் எட்டு கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், கடந்த எட்டு மாதங்களின் ஒன்றறை மடங்கு அதிகரித்துள்ளது. இதுவே, 2021ம் ஆண்டு ரூ.2.99 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது, 2,251 புகார்கள் பெறப்பட்டுள்ளன, 44 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 20 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. 2022ம் ஆண்டு சுமார் 4516 புகார்கள் பெறப்பட்டன, அதில் 13.87 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. 68 எப்.ஐ.ஆர்., போடப்பட்டுள்ளது. 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 81 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு, 48 கோடியே 32 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. 6396 புகார்கள் வந்ததில் 206 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. 44 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறு பேர் குண்டாசில் அடைக்கப்பட்டுள்ளனர். ரூ. 2.24 கோடி மீட்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளில் நடந்த மோசடியை ஒப்பிடுகையில் ஒவ்வொரு ஆண்டும் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மேலும், மோசடிகளில் சிக்குவோர் பெரும்பாலும் படித்தவர்கள், ஐ.டி., உள்ளிட்ட துறைகளில் பணிபுரிவோர், மூத்த குடிமக்கள் ஆவர்.இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டும் கும்பலிடம் ஏமாறாதீர்கள், உங்கள் பெயரில் சட்ட விரோத பார்சல் வந்துள்ளது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து பணம் அனுப்ப கேட்டால் பயப்படாமல் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவிக்கின்றனர்.மேலும், சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது cybercrime.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

போலீசாரை நம்புங்கள்

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், 20 நாட்களில் ஆன்லைன் முதலீட்டில் 10 லட்சத்தை இழந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் போலீசார், மோசடி பற்றி மணிக்கணக்கில் விளக்கினர். இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி அனுப்பினர். தொடர்ந்து, இவரை அணுகிய மோசடி கும்பல், மேலும், 14 லட்சம் ரூபாய் கொடுத்தால் பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பி மீண்டும் 14 லட்சத்தை இழந்துள்ளார். போலீசாரின் அறிவுறுத்தலை பின்பற்றி, அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு இது போன்ற போலியான நபர்களிடம் ஏமாறாமல் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

KRISHNAN R
ஆக 31, 2024 21:50

எல்லாம் லிங்க்......ஆதார் ...மொபைல் ... எல்லாம் ..ஆனால்.. நமது பிரைவசி .. பிம்பிளிகா பிலப்பிளி


Kalyanaraman
ஆக 31, 2024 10:37

நமது சட்டங்களும், சட்ட -நீதிமன்ற நடைமுறைகளும் விதிமுறைகளுமே குற்றவாளிகளையும் குற்றங்களையும் அதிகரிக்க வைக்கிறது. பல வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் முடிவதற்குள் வழக்கு தொடுத்தவர்கள் / குற்றவாளிகள் இறந்தே போய் விடுகிறார்கள். இப்படி ஆமையையே மிஞ்சும் தாமதத்தில் ஒவ்வொரு வழக்கும் நடப்பதால் மேலும் மேலும் குற்றம் செய்ய பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. முடிவாக நமது வரிப்பணம் நீதிமன்றங்களால் வீணடிக்கப்படுகிறது. மேலும், வருமான வரியை வருடாவருடம் தவறாமல் செலுத்துபவர்களுக்கு எந்த பாதுகாப்பையும் அரசு வழங்குவதில்லை.


Ramarajpd
ஆக 31, 2024 10:25

தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் மக்களில் 70-80% பேர் மோசடி பற்றிய புரிதல் வந்து விட்டது. இன்னும் 1-2 வருடங்களில் 100% ஆக மாறிவிடும் நல்லது தான்.


VENKATASUBRAMANIAN
ஆக 31, 2024 08:47

ஆசை யாரை விட்டது. படித்தால் மட்டும் போதாது. உலக நடப்புகளை தெரிந்த வைத்து கொள்ள வேண்டும். இதில் ஏமாற்றுபவர்கள் படித்தவர்களே அதிகம்


அப்பாவி
ஆக 31, 2024 07:49

டிஜிட்டல் புரட்சியில் மோசடி கள் அதிகமாயி தடுக்கப்படுவதில்லை. ஆனா, எவ்ளோ போச்சுன்னு துல்லியமா கணக்கு போட்டு சொல்லிடறாங்க. இதுக்கே ரெண்டு மெடல் குத்தி விடலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை