உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நடிகர் விஜய் கட்சியில் சேர துாண்டில் போடும் பா.ஜ., புள்ளிகள்

நடிகர் விஜய் கட்சியில் சேர துாண்டில் போடும் பா.ஜ., புள்ளிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக பா.ஜ.,வில் உள்ள சினிமா பிரபலங்கள், நடிகர் விஜய் கட்சியில் இணைய பேச்சு நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்த நடிகை குஷ்பு, 2021 சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட 'சீட்' வழங்கப்பட்டது. தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.பின், தேசிய செய்தி தொடர்பாளர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்த குஷ்புவுக்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில், தன் பதவியை ராஜினாமா செய்ததுடன், தி.மு.க.,வுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.நடிகர் சரத்குமார், லோக்சபா தேர்தலின்போது, தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை, பா.ஜ.,வில் இணைத்தார். அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகா, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.நடிகர் செந்தில், நடிகை நமீதா, நடிகர் ராதாரவி, இசை அமைப்பாளர் கங்கை அமரன் என, பல சினிமா பிரபலங்கள் பா.ஜ.,வில் உள்ளனர். ஆனால், இவர்கள் அவ்வளவு பேரும், கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார். இம்மாதம் கட்சியின் மாநாட்டை விஜய் நடத்த உள்ளார். பா.ஜ.,வில் உள்ள சினிமா பிரபலங்கள், மற்றும் முக்கிய நிர்வாகிகள் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் விபரம் அறிந்து கொண்ட விஜய் கட்சி நிர்வாகிகள் சிலர், அவர்களை த.வெ.க.,வுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் பரவி இருக்கிறது.இதனால், பா.ஜ.,வில் தங்களுக்கு எந்த பதவியும் அளிக்கப்படாததால், அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், விஜய் கட்சியில் இணைவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக தெரியவந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சோமபானம்
செப் 11, 2024 22:18

இந்த கூத்தாடி கூட்டம் கூண்டோடு பஜகவில்லிருந்து விலகி தெலைந்தால் பஜகவிற்கு நல்லது. ஒரு கூத்தாடியும் கட்சிக்கு என்று உழைத்ததில்லை, ஆகையால் கடையை காலி செய்தால் பஜகவிற்கு நல்லது.


NACHI
செப் 11, 2024 13:45

இந்த நடிகர் எங்கே போனாலும் விளங்காது ....போய் தொலையும்


ayen
செப் 11, 2024 10:50

நடிகை குஷ்பு, சரத்குமார், ராதிகா, கங்கை அமரன், செந்தில் இன்னும் பல சினிமா துறையினர் பா.ஜனதாவில் இருந்தாலும் அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு கிடையாது. அவர்கள் எந்த கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சி, அவர்கள் செல்வாக்கை பெருக்கிக் கொள்ள முடியாது. அவர்கள் கட்சி தாவினாலும் தாவாவிட்டாலும் யாருக்கும் எந்த ஆதாயமும் கிடையாது.


சந்திரசேகர்
செப் 11, 2024 09:42

வாழ்த்துக்கள். அங்கே போய் எதுவும் கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்சிக்கு தாவி விட வேண்டியது தான். கட்சி மாறுபவர்கள் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். பதவி மீதுதான் அவர்கள் ஆசை இருக்கும்.


Ravichandran
செப் 11, 2024 09:13

அப்படியே அறுத்து தள்ளிட்டாலும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை