உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சும்மா கிடக்கும் அம்மா திருமண மண்டபங்கள்: ரூ.51 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் அம்போ

சும்மா கிடக்கும் அம்மா திருமண மண்டபங்கள்: ரூ.51 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் அம்போ

சென்னை:சென்னை, மதுரையில், 51 கோடி ரூபாய் செலவில், கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, 'அம்மா திருமண மண்டபங்கள்' மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை பெருநகரில் நான்கு இடங்கள், மதுரையில் ஒரு இடம் என 5 இடங்களில், 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை அண்ணா நகர், சென்னையில் ஆவடி பருத்திப்பட்டு, அயப்பாக்கம், கொரட்டூர், வேளச்சேரி ஆகிய இடங்களில், அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. 2018ல் அறிவிக்கப்பட்டு, 2020க்குள் அனைத்து மண்டபங்களும் கட்டி முடிக்கப்பட்டன.இவற்றை தனியார் வாயிலாக நிர்வகிக்க, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இந்த மண்டபங்கள் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன.சென்னையில் மண்டபங்கள் கட்டுமான பணிகள் முடிந்து, திறப்பு விழாவும், 2020ல் நடந்தது. ஆனால், இதை நிர்வகிப்பதற்கான தனியாரை தேர்வு செய்வதில், வாரிய அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். குறிப்பாக, சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட, அம்மா திருமண மண்டபம் பயன்பாட்டுக்கு வராத நிலையில், சமூக விரோதிகள் அதில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார சாதனங்களை திருடி சென்று விட்டனர். அம்மா திருமண மண்டபங்கள் நிலைமை இப்படி தான் உள்ளன. மதுரையில் அம்மா திருமண மண்டபம், 2021ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், 2023 வரை யாரும் ஒப்பந்தம் எடுக்க வராததால், பூட்டியே கிடந்தது. 2023ல் இதை ஒப்பந்தம் எடுத்தவர், 'அஞ்சலி மஹால்' என, பெயரை மாற்றி விட்டார். வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரமாக, திறப்பு விழா கல்வெட்டு மட்டுமே உள்ளது. கடந்த ஆட்சி திட்டம் என்பதுடன், அதன் பெயரும், இன்றைய ஆட்சியாளர்களுக்கு பிடிக்காமல் போய் விட்டது. இதனால், மக்கள் நலனுக்காக, வீட்டுவசதி வாரியம் செய்த 51 கோடி ரூபாய் செலவு வீணாகியுள்ளது.திருமண மண்டபமாக பயன்படுத்த முன்வராத நிலையில், வேறு பயன்பாட்டுக்காக இதை வாடகைக்கு கொடுப்பது குறித்தாவது, அதிகாரிகள் யோசிக்க வேண்டும். இது குறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆட்சிக் காலத்தில் சரியான முறையில் திட்டமிடல் இன்றி, அவசர கோலத்தில் அம்மா திருமண மண்டபங்களை கட்டி விட்டனர். வாகனங்கள் நிறுத்துமிட வசதி இல்லை. குறிப்பாக, சென்னை வேளச்சேரி மண்டபத்தில் பொருட்கள் திருடு போன நிலையில், புதிய பொருட்கள் வாங்கி, சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த மண்டபம் அமைந்துள்ள தெரு மிக குறுகலாக இருப்பதால், போக்குவரத்து பிரச்னை ஏற்படும். இதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பருத்திப்பட்டு, அயப்பாக்கம், கொரட்டூர் மண்டபங்களில் காணப்பட்ட குறைபாடுகளும் சரி செய்யப்பட்டு, புதிய ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில், இந்த மண்டபங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

இடம் / செலவு ரூபாயில்

கொரட்டூர் / 13.90 அயப்பாக்கம் / 12.22 கோடி ஆவடி / 11 கோடிவேளச்சேரி / 8.70 மதுரை / 5 கோடி------------------மொத்தம் / 50.82------------------

இடம் / செலவு ரூபாயில்

கொரட்டூர் / 13.90 அயப்பாக்கம் / 12.22 கோடி ஆவடி / 11 கோடிவேளச்சேரி / 8.70 மதுரை / 5 கோடி------------------மொத்தம் / 50.82------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

metturaan
மார் 12, 2025 07:11

இந்த கான்செப்ட் இப்போதான் கவனத்துக்கு வருது.... சரி..சரி.... அப்பா திருமண மண்டபம் ன்னு பெயர் மாத்தினா எல்லாம் சரியாகிவிடும்


Ethiraj
மார் 09, 2025 09:17

Wasting tax payers money on new project corporation loves it At every stage suitcase s problem


V GOPALAN
மார் 08, 2025 09:53

கருணாநிதி நூற்றாண்டு கல்யாணமண்டபம் ஊழல் தெரிந்து கொள்ளவும் .ஓரு லஅச்சம் புக் செயும்போது கட்டவேண்டும் கல்யாணம் முடிந்தவுடன் பல்வேறு மற்ற செலவுகளை சொல்லி மேலும் ஒரு லட்சம் தரவேண்டும். அரசிடமிருந்து 50000 வாங்கி தருவதாக இழுத்தடிப்பார்கள் அரசாங்கத்திற்கு 50000 ம் 150000 கட்டிங்


Bhaskaran
மார் 07, 2025 13:17

தரமா கட்டியிருக்காங்களா இல்லை ஒரிரு ஆண்டில் சீலிங் பெயர்ந்து விழுமா


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 06, 2025 10:11

அதிமுக ஜெயக்குமார் அந்தர் பல்டி அடித்து அதிமுகவை திமுகவோடு இணைக்க திட்டமிட்டு பாராளுமன்ற தொகுதி அதிகரிப்பு அல்லது குறைப்புக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் திமுகவிற்கு ஆதரவாக அறிக்கை அளித்துள்ளார். அவரது அறிக்கையில் திமுக என்ன சொல்கிறதோ அதையே அச்சு அசலாக அப்படியே கூறியுள்ளார்.இதிலிருந்து அதிமுகவை எம்ஜிஆர் ஜெயலலிதா பின்னர் மீண்டும் தாய் கட்சியான திமுகவோடு இணைக்க முன்மொழிந்துள்ளார். ஆக திமுகவும் அதிமுகவும் வேறுவேறு அல்ல. நாங்கள் ஒரே குளத்தில் குளிப்பவர்கள் தான் என்று கூறியுள்ளார். மும்மொழி திட்டத்திலும் அதிமுக திமுகவை கண் மூடி தனமாக ஆதரிக்கிறது. இது நாங்கள் ஒட்டி பிறந்த இரட்டையர் என்று அதிமுக கூறியுள்ளது. இதன் மூலம் தெரிவது என்னவென்றால் இந்த கல்யாண மண்டபங்கள் கூடிய சீக்கிரம் முதலமைச்சர் திருமண மண்டபம் என பெயர் மாற்றம் செய்து கூடிய விரைவில் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பு திறக்கப்பட்டுவிடும். அதிமுக ஜெயித்தால் திமுக கொள்ளை புரத்தில் நின்று கொண்டு அதிமுக வாயிலாக ஆட்சி செய்யும். திமுக ஜெயித்தால் அதிமுக இது போல் அவ்வப்போது திமுகவோடு சேர்ந்து கொள்ளும். சில நேரங்களில் மட்டும் லைட்டா பட்டும் படாமலும் திமுகவிற்கு எதிராக அறிக்கை போராட்டம் நடத்தும். தமிழக மக்களே நீங்கள் எப்படிபட்ட இளித்தவாயர்கள் என்று உங்களை கணக்கு போட்டு வைத்திருக்கிறது திமுக அதிமுக மற்றும் அதனின் கிளை கட்சிகள் என்று பாருங்கள். 5300 வருடங்கள் பழமையான தமிழ் நாகரிகத்தின் இன்றைய நிலை இது தான்.


அப்பாவி
மார் 06, 2025 06:23

சும்மா இருங்கய்யா... அவனவன் கலியாணத்துக்கு பொண்ணே கிடைக்கலைன்னு காண்டாயிருக்கான்.


N Sasikumar Yadhav
மார் 06, 2025 05:52

சரியாக திட்டமிடாத அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் ஆட்டய போடவே திட்டம் போடுகிற கூட்டம்தான் இந்த மானங்கெட்ட திராவிட கும்பலுங்க


புதிய வீடியோ