சென்னை செம்மஞ்சேரியில் தங்கியிருந்த வங்கதேச பயங்கரவாதியை, சென்னை போலீசார் உதவியுடன் அசாம் போலீசார் கைது செய்தனர்.அண்டை நாடான வங்கதேசத்தில் இயங்கும், 'அன்சருல்லா பங்களா டீம், ஜமாத்- உல் முஜாஹிதீன்' என்ற இரு பயங்கரவாத இயக்கங்கள், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oijerkpi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 அதிரடிப்படை
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில், இந்த இயக்கங்களை சேர்ந்தோர், ஏற்கனவே பல்வேறு அசம்பாவித சம்பவங்களை அரங்கேற்றியதை அடுத்து, அவர்களை பிடிக்கும் பணி, சிறப்பு அதிரடிப்படை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அசாம் சிறப்பு அதிரடிப்படை போலீசார், இந்தியா முழுதும் இவ்விரு இயக்கங்களைச் சேர்ந்தோரை பற்றிய விபரங்களை சேகரித்து, அவர்களை வேட்டையாடி வருகின்றனர். அந்த வகையில், ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், அசாம் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் இணைந்து, சென்னை செம்மஞ்சேரியில் தங்கி இருந்த அபு சலாம் அலி என்பவரை கைது செய்துள்ளனர். அசாம் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் ஐ.ஜி., பார்த்தசாரதி மஹந்தா கூறியதாவது:ஜமாத் உல் முஜாஹிதீன் மற்றும் அன்சருல்லா பங்களா டீம் குழுக்களைச் சேர்ந்தோர், பாகிஸ்தான் சென்று பயங்கரவாத பயிற்சி எடுத்தவர்கள். பின், வங்கதேசம் திரும்பி, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத திட்டங்களோடு ஊடுருவி உள்ளனர். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று, அங்குள்ள ஹிந்து தலைவர்களை கொல்வது, அரசு கட்டமைப்புகளை வெடிகுண்டு வீசி தகர்ப்பது உள்ளிட்ட பயங்கரவாத செயல் திட்டங்கள் வகுத்து செயலாற்றி வருகின்றனர். அவர்களை பிடிக்கும் பணி, அசாம் சிறப்பு அதிரடிப்படை வசம் உள்ளது. இதுவரை, 13 பேரை கைது செய்துள்ளோம். அபு சலாம் அலி, சென்னைக்கு அருகே செம்மஞ்சேரியில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்து, ஆந்திர போலீஸ் மற்றும் செம்மஞ்சேரி போலீசார் உதவியுடன் கைது செய்திருக்கிறோம். இப்படி வங்கதேச பயங்கரவாதிகளை பிடிக்கும் பணிக்கு, 'ஆப்பரேஷன் ப்ரகத்' என, பெயரிடப்பட்டு உள்ளது. குறிவைப்பு
அபு சலாம் அலியுடன் தொடர்புடைய சிலர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்கியிருக்கும் தகவல் கிடைத்துள்ளது. விரைவில், அவர்களையும் கைது செய்வோம். அபு சலாம் அலி, மேற்கு அசாமின் துப்ரி மாவட்டத்தில் இருக்கும் குடிகான் கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தியாவில் வங்கதே பயங்கரவாதிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டதோடு, ஹிந்து தலைவர்கள் பலருடைய உயிருக்கும் குறிவைத்திருந்ததாக அபு சலாம் கூறியுள்ளார். அதேபோல, நுார் இஸ்லாம் மண்டல் மற்றும் ஷாஹிநுார் இஸ்லாம் உள்ளிட்ட பல பயங்கரவாத இயக்கங்களோடும் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் பிள்ளையார் சுழி
ஜமாத் உல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி மூசா என்ற முகமது மொசுருதீன் என்பவர், 2016ல் திருப்பூரில் தங்கியிருந்தார். அத்தகவல் அறிந்து வந்த மேற்கு வங்க போலீசார், தமிழக போலீசார் உதவியுடன் மொசுருதீனை கைது செய்தனர். மொசுருதீன், ஐ.எஸ்., பயங்கரவாத குழுவோடு தொடர்புஉடையவர். அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் தான், தற்போது அபு சலாம் அலி சிக்கியுள்ளார்.
மாயமான 45 பேர்?
திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்களில் வங்க தேசத்தினர் தங்கி பணியாற்றி வந்தனர். போலி ஆதார் கார்டு வாயிலாக தமிழகத்தில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். பின், ஜாமின் பெற்று, சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களில், 45 பேரை காணவில்லை என்பதால், தமிழக போலீசார் தேடி வருகின்றனர். அவர்களில் பலர், ஜமாத் உல் முஜாஹிதீன் மற்றும் அன்சுருல்லா பங்களா டீம் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. - நமது நிருபர் -