உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோடநாடு வழக்கில் நழுவியது பிடி; கோபத்தின் உச்சியில் முதல்வர்

கோடநாடு வழக்கில் நழுவியது பிடி; கோபத்தின் உச்சியில் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வனவிலங்குகள் வேட்டையாடப்பட்ட வழக்கில், அ.தி.மு.க., நிர்வாகி சஜீவன் கைதாகாமல் தப்ப விட்ட அதிகாரிகள் யார் என்ற விசாரணை தீவிரமாகியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், அவர் இறந்த பின், 2017 ஏப்., 24ல் கொள்ளை நடந்தது. அதை தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதுார் கொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, விபத்து மற்றும் தற்கொலையில் நான்கு பேர் இறந்தனர். இந்த மர்ம மரணங்கள், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d3gkk10i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றவே கொள்ளை நடந்ததாகவும், அதன் பின்னணியில், அ.தி.மு.க., அதிமுக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கேற்ப, அ.தி.மு.க., ஆட்சியில் கோடநாடு சம்பவம், சாதாரண கொலை, கொள்ளை வழக்காக முடிக்கப்பட்டது.

அமைப்பை அறிந்தவர்

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த வழக்கு துாசி தட்டப்பட்டது. இப்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுவரை, 230க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டு உள்ளனர். இந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களில், இறந்து போன கனகராஜை தவிர, மற்ற குற்றவாளிகள் அனைவருமே கேரளாவை சேர்ந்தவர்கள்.இதன் பின்னணியில், கேரளாவை சேர்ந்த அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி செயலர் சஜீவன் இருப்பதாக அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது.கோடநாடு எஸ்டேட்டில் அனைத்து மர வேலைப்பாடுகளையும் செய்தவர், அதன் அமைப்பை அறிந்தவர் என்பதால், அங்குள்ள ஆவணங்களை கொள்ளை அடிப்பதற்கு, அவரே ஆட்களை ஏற்பாடு செய்திருந்தார் என்றும் பலரும் சந்தேகம் எழுப்பினர்.ஆனால், சம்பவம் நடந்த போது, அவர் துபாயில் இருந்ததால், தனக்கும், அந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சஜீவன் மறுத்தார்.அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து விட்டே, துபாய் சென்று விட்டதாகவும், அதற்கு பரிசாகவே அவருக்கு மாநில நிர்வாகி பதவி தரப்பட்டதாகவும், பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த வழக்கில் சஜீவனும் விசாரிக்கப்பட்டார்.

நழுவும் பிடி

இப்போது வரையிலும், இந்த வழக்கில் பெரியளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் தான், கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அருகில், கூடலுார் அல்லுார் வயல் பகுதியில், தனியார் எஸ்டேட்டில் சருகுமான், காட்டுமாடு ஆகியவற்றை வேட்டையாடிய சிலரை வனத்துறையினர் கைது செய்தனர். நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்களையும் கைப்பற்றினர்.சஜீவனுக்கு சொந்தமான எஸ்டேட்டில் இவற்றைக் கைப்பற்றியதால், வேட்டையாடியவர்கள் மீதும், சஜீவன் மீதும் வனத்துறை மற்றும் கூடலுார் போலீசாரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், சஜீவன் கைது செய்யப்பட்டால், அதை வைத்து கோடநாடு வழக்கில் நடந்த உண்மை விபரங்களை வெளியில் கொண்டு வந்து விடலாம் என, தமிழக போலீஸ் உயரதிகாரிகள் சிலர் நினைத்திருந்தனர்.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க., மிக முக்கிய புள்ளிகளை தொடர்புபடுத்தி, அமைச்சர் உதயநிதி உட்பட அக்கட்சி நிர்வாகிகள் பலரும் கடும் விமர்சனம் செய்து வந்த நிலையில், வேட்டை சம்பவத்தில் சஜீவன் சிக்கியது, பெரும் திருப்பமாக கருதப்பட்டது. முதல்வர் ஸ்டாலினும், இதில் பெரிதும் ஆர்வம் காட்டி வந்ததாக தெரியவந்துள்ளது.ஆனால், வனவிலங்குகள் வேட்டை சம்பவத்தில், சஜீவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து, அவருக்கு முன் கூட்டியே தகவல் தெரிந்து விட்டதால், அவர் அவசர, அவசரமாக துபாய் தப்பிச் சென்றுள்ளார். இதன் பின்னணியில், சஜீவனுடன் தொடர்பில் உள்ள தமிழக வனத்துறை உயரதிகாரிகள் சிலரும், நீலகிரி காவல்துறையில் உள்ள சிலரும் இருப்பதாக தெரியவந்துள்ளது.கோர்ட்டில் ஜாமின் பெற்ற பின்பே, சஜீவன் வருவதற்கு வாய்ப்புள்ளதால், கோடநாடு வழக்கில் மிக முக்கியமான பிடி நழுவி விட்டதாக காவல்துறை உயரதிகாரிகள் கடும் விரக்தியில் உள்ளனர். மாநில அரசுத்துறைகளில் அ.தி.மு.க., ஆதிக்கமும் இதில் உறுதியாகியுள்ளதால், முதல்வர் ஸ்டாலின் கடும் கோபம் அடைந்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.சஜீவன் துபாய் தப்பிச் செல்ல உதவிய அதிகாரிகள் யார், என்ற விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K.n. Dhasarathan
மே 15, 2024 12:17

சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகைளையும், காவல்துறை அதிகாரிகளையும் அரசு ஏன் விட்டு வைத்திருக்கிறது? உடனடி சஸ்பெண்ட் செய்ய உயர் அதிகாரிகள் செய்யாதது ஏன்? முதல்வர் தலையிட்டு தான் செய்யணுமா? நீதி துறையும் தூங்குவது ஏனோ? செயல் படாத அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்கள் சஸ்பென்ஷன் அல்ல டிஸ்மிஸ், ஒரு வழக்கு எத்தனை வருடங்கள் தான் தூங்குவது? மனா சாட்சி இல்லையா?


ஆரூர் ரங்
மே 15, 2024 11:34

பங்காளி கழகங்களின் நாடகம் இன்னுமா புரியவில்லை? நிஜமாகவே சீரியசாக விசாரித்திருந்தால் விடியலின் மூன்றாண்டுகளில் வழக்கே முடிவுக்கு வந்திருக்கும். நான் அடிப்பது போல அடிக்கிறேன். நீ அழுவது போல நடி என்ற ஒப்பந்தம் இருக்கலாம்.


குமரி குருவி
மே 15, 2024 11:07

புதையல் கிடைக்கும் என ஆவலாக இருந்தால் .... அவல் கூட கிடைக்கலையே..


Palanisamy Sekar
மே 15, 2024 10:35

இதெல்லாம் சந்தேக செய்திகளே தவிர உறுதியான செய்திகளே இல்லை இதில் திமுகவும் அதிமுகவும் இணைந்தே செயல்படுகின்றார்கள் பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டால் எடப்பாடி மீது வழக்கோ அல்லது விசாரணையோ நடக்காது என்கிற உத்தரவாதம் கொடுத்த பிறகே எடப்பாடி பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார் என்பதுதான் நிஜம் மூன்று ஆண்டுகளாகவா தூக்கத்தில் இருந்தார் ஸ்டாலின்? தேர்தல் வாக்குறுதிகளில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கும் உண்டு மூன்றாண்டுகள் முடியும்போது கடும் கோபம் பொத்துக்கொண்டு வருதோ? இதெல்லாம் ஜுஜ்ஜுப்பி செய்திகள் எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் ஒரு உண்டர்ஸ்டாண்டிங் உண்டு அது கொடுநாடு சம்பந்தப்பட்டதில் உண்டு என்பதை உலகறியும் கொடநாடு மர்மங்கள் என்று திகில் படமே வந்தாலும் வரலாம் அவ்ளோ ரகசியங்கள் உயிரோடு உலா வருகின்றது யாருக்கும் அக்கறையே இல்லை விசாரிப்பதில்ellaame அரசியல் அரசியல் அரசியல் தான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை