உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரயில் டிக்கெட் வாங்க முடியல: கனிமொழி

ரயில் டிக்கெட் வாங்க முடியல: கனிமொழி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

“ரயில் நிலையங்களுக்குச் சென்று டிக்கெட் எடுக்க முடியவில்லை. அங்கேயும் ஹிந்தியை திணித்து விட்டது மத்திய அரசு. இப்போது சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது,'' என, தி.மு.க., - எம்.பி.,யான கனிமொழி, மத்திய அரசை விமர்சித்து பேசியுள்ளார்.லோக்சபாவில் நேற்று, பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:மத்திய அரசின் பட்ஜெட்டில் கல்விக்காக, இந்த ஆண்டு 2.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள பூடானில், 8 சதவீதம் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், கல்விக்காக ஏராளமாக செய்வது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.கல்விக்காக அதிக நிதியை மாநில அரசுதான் தருகிறது. அதேநேரம் ஜி.எஸ்.டி.,யாக வரி வசூலிக்கும் மத்திய அரசு, மாநில அரசுக்கு தர வேண்டிய எதையும் தர மறுக்கிறது.நியாயமற்றவர்கள்மணிமேகலையின் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக் கொண்டு, மாநிலங்களுக்கு பிச்சை பாத்தித்தை கையில் கொடுத்துள்ளது மத்திய அரசு.புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால், தமிழகத்துக்கு தர வேண்டிய 500 கோடி ரூபாய் கல்வி நிதியை தர மறுத்துள்ளனர். குஜராத்தில் முதல்வராக இருந்த காலகட்டங்களில், மாநில உரிமைக்காக குரல் கொடுக்கும் முதல் மனிதராக இருந்த பிரதமர் மோடியே, இன்று மாநில உரிமைகளைப் பறிக்கும் மனிதராக மாறியுள்ளார். மொழிக் கொள்கையை வைத்து, தி.மு.க., நாடகம் ஆடுவதாக கூறி, விமர்சிக்கின்றனர். மொழி போராட்டத்திற்காக, உயிரை விட்டவர்கள் திராவிட இயக்கத்தவர்.தமிழகத்தில் உள்ள 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 15ல் தான் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. மொழிக் கொள்கையில் நியாயம் அற்றவர்களாக பா.ஜ.,வினர் உள்ளனர்.உன் ஜாதி என்ன?ரயில் நிலையங்களுக்குச் சென்று டிக்கெட் எடுக்க முடியவில்லை. அங்கேயும் ஹிந்தியை திணித்து விட்டது மத்திய அரசு. இப்போது சமஸ்கிருதமும் திணிக்கப்படுகிறது.ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த கால கட்டத்தில் தான், மதிப்புமிக்க பார்லிமென்டிலேயே, ஒரு எம்.பி.,யைப் பார்த்து இன்னொரு எம்.பி., உன் ஜாதி என்ன? என்று கேட்கும் சூழல் உருவாகி உள்ளது. இதில் கூடுதல் வேதனை, குறிப்பிட்ட அந்த எம்.பி.,யின் பேச்சை, பிரதமரும் சேர்ந்து ஆதரிப்பது தான்.இவ்வாறு கனிமொழி பேசினார்- நமது டில்லி நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

seshadri
ஆக 03, 2024 12:24

அக்கா கனிமொழி வாய் தவறி ரயில் டிக்க்ட் வாங்க முடியவில்லை என்று சொல்லிவிட்டாங்க. அவர்கள் ரயிலை வாங்க முடியவில்லை என்பதைத்தான் மாற்றி கூறி vittaarkal.


JANA VEL
ஆக 03, 2024 11:55

என்னாது ரயிலில் போவதற்கு டிக்கட் எடுக்கணுமா? சொல்லவே இல்லே


Bhaskaran
ஆக 03, 2024 07:56

நீங்கள் ரயிலில் கூட பயணம் செய்பவரா


Sathyanarayanan Sathyasekaren
ஆக 03, 2024 05:52

டிக்கெட் வாங்குவதை பற்றி பொதுமக்கள் தான் பேசவேண்டும், உங்களை போன்று மக்கள் வரிப்பணத்தில் ஓசியில் பயணம் செய்யும் அரசியல் வியாதிகள் பேசக்கூடாது.


sankar
ஆக 02, 2024 22:12

ஒருவர் சொன்னதை திரித்துப்பேசும் கலையில் அசகாய சூரர்கள் இவர்கள் - ஜாதி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஜாதியை பற்றி பேசுகிறார்கள் என்றுதான் அமைச்சர் அவர்கள் சொன்னார் - இந்த அம்மா புழுகுது


sankar
ஆக 02, 2024 22:12

ஒருவர் சொன்னதை திரித்துப்பேசும் கலையில் அசகாய சூரர்கள் இவர்கள் - ஜாதி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஜாதியை பற்றி பேசுகிறார்கள் என்றுதான் அமைச்சர் அவர்கள் சொன்னார் - இந்த அம்மா புழுகுது


hariharan
ஆக 02, 2024 22:11

ஓஹோ, அதுனாலத்தான் அன்னைக்கு கட்டுமரம் கள்ள ட்ரெயினில் இலவசமாக பயணித்ததோ?


Ethiraj
ஆக 02, 2024 20:43

Education, employment, promotion they ask for e with citizens why not in parliment. Caste and family is vital for anything. In TN only one family member can become CM or Dy CM.


Sreeprabu 1983
ஆக 02, 2024 19:53

உங்கள் விடியல் ஆட்சியில் அரசு பஸ்ஸில் பயணம் செய்ய கூட அதிக கட்டணம் வசூல் செய்றீங்க அப்புறம் மத்திய அரசு கட்டுபாட்டில் இருக்கும் ரயில் கட்டணம் குறைவு அதனால் மக்கள் ரயிலில் பயணம் விரும்புறாங்க அதனால் ரயில் டிக்கெட் கிடைக்க கஷ்டமா தான் இருக்கும் முதலில் கனிமொழி அவர்களே உங்க ஆட்சி குறைகளை சரி செய்யுங்கள் ??


Jagan (Proud Sangi)
ஆக 02, 2024 19:35

ரயில்ல டிக்கெட் வாங்கணுமா ? என்ன காந்தி செத்துட்டாரா மாதிரி இருக்கு இந்த கட்டுமர குளுவான்கள் கேட்பது


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ