வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழ்நாடு முழுமைக்கும் உங்கள் கட்சியைக் கலைத்து விட்டு தந்தையும் மகனும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் அமைதி நிலவும்.
சரியான கருத்து. நாட்டுக்கு இவர்கள் பாரம்தான். வேஸ்ட் பீன்ஸ்.
பா.ம.க.,வில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட அமைப்புகள் முழுமையாக கலைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில், அக்கட்சிக்கு எட்டு மாவட்ட அமைப்புகள் உள்ளன. ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது அதிகப்படியான புகார்கள், கட்சித் தலைமைக்கு வந்தன. குறிப்பாக, பொது மக்களுக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டு, கட்டப்பஞ்சாயத்து வாயிலாக பணம் பறிப்பது, நிலங்களை வளைப்பது என பல்வேறு விதமான புகார்கள் குவிந்தன. லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ., கூட்டணியை கடந்து, பல நிர்வாகிகள் தி.மு.க.,வினருடன் சேர்ந்து மறைமுகமாக தேர்தல் வேலை பார்த்துள்ளதாகவும், அதற்காக ஆளுங்கட்சியிடம் பலன் அனுபவித்ததாகவும் புகார்கள் கூறப்பட்டன. இப்புகார்கள் தொடர்பாக, ரகசிய விசாரணைக்கு ஏற்பாடு செய்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இப்போது ஒட்டுமொத்த கட்சி அமைப்புகளையும் கலைத்து, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.அம்மாவட்டங்களின் கட்சி நிர்வாகத்தை கவனிக்க, சட்டசபை தொகுதி வாரியாக செயலர் மற்றும் பொறுப்பாளர்களை நியமிக்கவும் முடிவெடுத்து, அதை அறிவிப்பிலும் தெரிவித்திருக்கிறார். இதேபோல, மத்திய மற்றும் வட மாவட்டங்களில் இருக்கும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலர் மீதும் ராமதாசுக்கு புகார்கள் சென்றுள்ளன. அவற்றையும் ராமதாஸ் விசாரித்து வருகிறார். அங்கும் விரைவில் களையெடுப்பு அல்லது கலைப்பு நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின- நமது நிருபர் -.
தமிழ்நாடு முழுமைக்கும் உங்கள் கட்சியைக் கலைத்து விட்டு தந்தையும் மகனும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் அமைதி நிலவும்.
சரியான கருத்து. நாட்டுக்கு இவர்கள் பாரம்தான். வேஸ்ட் பீன்ஸ்.