உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சரிவை சந்தித்த காங்., ஓட்டு சதவீதம்

சரிவை சந்தித்த காங்., ஓட்டு சதவீதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை காங்கிரஸ் பெற்றிருந்தாலும், அதன் ஓட்டு சதவீதம் சரிவையே சந்தித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 44 இடங்களில் காங்கிரஸ் வென்றது. அதேபோல், 2019ல், 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சி, 99 இடங்களை கைப்பற்றியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வென்றிருந்தாலும், அதன் ஓட்டு சதவீதம் சரிந்துள்ளதாக தேர்தல் கமிஷனின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதன்படி, கடந்த 2019ல் புதுச்சேரியில் 57லிருந்து 52 சதவீதமாகவும், தமிழகத்தில் 13லிருந்து 11ஆகவும், டில்லியில் 22லிருந்து 19ஆகவும் ஓட்டு சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், பஞ்சாப், திரிபுரா மாநிலங்களில் 14 சதவீதம் வரையிலும், கேரளா, ம.பி.,யில் 2 சதவீதம் வரையிலும் காங்கிரசின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளது. இது போல, 16 மாநிலங்களில் காங்.,கின் ஓட்டு சதவீதம் கணிசமாக குறைந்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Neo Aryan
ஜூன் 06, 2024 09:46

எதற்காக பாராட்டவேண்டும்?


P N SIVAKUMAR
ஜூன் 06, 2024 08:38

பாராட்ட மனம் இல்லை என்றால் சும்மா இருங்கள். தோல்வியிலிருந்து மீண்டு வந்தவர்களை பாராட்ட மனம் இல்லை.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ