உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து சரிவு; நுகர்வோர் ஏமாற்றம்

உழவர் சந்தைகளுக்கு காய்கறி வரத்து சரிவு; நுகர்வோர் ஏமாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து 1,000 டன்னாக குறைந்துள்ளதால், நுகர்வோர்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய, 1999ல் உழவர் சந்தை திட்டம் துவக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுதும் தற்போது, 192 உழவர் சந்தைகள் உள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக உழவர் சந்தைகள் பராமரிப்பு கிடப்பில் போடப்பட்டன.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், உழவர் சந்தைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, 30க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகளில், மின்னணு விலை பட்டியல் பலகை, 25 உழவர் சந்தைகளில் கழிவுகளை உரமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.மேலும், 100 இடங்களில் உழவர் சந்தைகளை துவங்க திட்டமிடப்பட்டு, 14 இடங்களில் மட்டும் புதிதாக துவங்கப்பட்டு உள்ளது. உழவர் சந்தைக்கு நாள்தோறும் 2,300 டன் அளவுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் வரத்து இருந்தது.இதன் வாயிலாக, 8.50 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடந்தது; 8,000 விவசாயிகள் பயன் பெற்று வந்தனர். சில மாதங்களாக உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,000 டன்கள் அளவிற்கு மட்டுமே வரத்து உள்ளது.இதனால், உழவர் சந்தைகளுக்கு பொருட்களை வாங்க வரும் நுகர்வோர்கள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.இதேநிலை தொடர்ந்தால், பல உழவர் சந்தைகளை மூடும் நிலை ஏற்படும். இந்தப் பிரச்னையை, உழவர் சந்தைகளை பராமரித்து வரும் வேளாண் வணிகப் பிரிவினர் கண்டும், காணாமலும் உள்ளனர். காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்க, தோட்டக்கலை துறை முயற்சி எடுக்கவில்லை எனக்கூறி நழுவி வருகின்றனர். தோட்டக்கலை துறையுடன், வேளாண் வணிகப் பிரிவினர் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் ஊட்ட முடியும்.இப்பிரச்னையில், வேளாண் துறை செயலர் அபூர்வா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
செப் 04, 2024 20:32

இனிமே நுகர்வோர் காய்கறியை எடுத்து முகர்ந்து பாத்துட்டு அதான் நுகர்ந்து பாத்துடு போயிடணும். விலை குடுத்து வாங்க முடியாது.


வைகுண்டேஸ்வரன்
செப் 04, 2024 14:46

இடைநிலை புரோக்கர்களை விலக்கி உழவர்களே நேரிடையாக தங்களின் விளைச்சல்களை விற்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அவர்களின் வாழ்நிலை உயர்ந்தது. இது கண்டு பொறுக்காத அதிமுக + பிஜேபி ஆட்சி உழவர் சந்தைகளை மூடின. கோவையில் இவை மீண்டும் திறக்கப்பட்டு நல்ல கறிகாய்கள் சகாய விலையில் கிடைக்கிறது.


ஆரூர் ரங்
செப் 04, 2024 17:03

இடைத்தரவர்களை ஒழித்து உழவர்கள் ஆன்லைன் மார்க்கெட் மூலம் தங்களது விளைபொருட்களை நாடுமுழுவதும் விற்க வசதியாகதான் 3 வேளாண்மைச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது . அதனை எதிர்த்த பயங்கரவாத கூட்டம் ஊளையிடலாமா?


yts
செப் 04, 2024 07:23

உழவர் சந்தையிலும் காய்கறி விலை வெளி சண்தை விடஅதிகமாகத்தான் விற்கப்படுகிறது


CHELLAKRISHNAN S
செப் 04, 2024 11:40

it is useful for only whole sale merchants


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை