உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: இலவசம் கட்டாயம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: இலவசம் கட்டாயம்!

புதுடில்லி: தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை வாரி வழங்குவது பிரதமர் மோடிக்கு பிடிக்காது. பலமுறை பொதுக்கூட்டங்களில் இலவசங்களுக்கு எதிராக பேசியுள்ளார். ஆனால், காங்கிரசோ இலவசங்களை அள்ளி வீசி, கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.'கடந்த ஆண்டுகளில் மக்களுக்கு எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தோம் என சொல்லி வெற்றி பெற முடியாது' என்பதை இந்த தேர்தலில் கண்டுகொண்டார் மோடி. எனவே, தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள தயாராகி விட்டார்.மஹாராஷ்டிராவில், தற்போது பா.ஜ., - -ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசிய வாத காங்., கூட்டணி அரசு உள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக்காலம், இந்த ஆண்டு அக்டோபரில் முடிவடைகிறது; அதற்கு முன் தேர்தல் நடைபெறும்.இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், '21 - 60 வயது வரையுள்ள மகளிருக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் உள்ள மாணவியரின் மேல்படிப்பிற்கு அரசு செலவு செய்யும்' என, பல இலவசங்களை வாரி வழங்கியுள்ளது. 'ஏற்கனவே கூட்டணியில் உள்ள அஜித் பவாருடன் பிரச்னை, அப்படியிருக்க இந்த இலவசங்கள் பா.ஜ., கூட்டணி அரசுக்கு உதவுமா?' என, கேள்விகள் எழுப்பப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

MADHAVAN
ஜூலை 06, 2024 11:26

அஜித் பவார் அடித்தக்கொள்ளை கொஞ்சம் நஞ்சம் அல்ல, அவனது சொத்துக்களை முடக்கினால், அடுத்த பத்து ஆண்டுக்கு மஹாராஷ்டிராவில் பல அரசுத்திட்டங்கள் நடத்தலாம்,


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 11:20

திறமையான தமிழர்களை ஒதுக்கிவிட்டு மெஜாரிட்டி சிங்களவர்களுக்கு இடஒதுக்கீடு( Policy of Standardization) சிறப்பு சலுகைகள் அளித்த இலங்கை பாழாகப்போனது. மிச்சம் மீதியை இலவசம், இயற்கை விவசாயம், மலிவான பெட்ரோல் என அழித்தனர். நாம் நாட்டைக் காப்பாற்ற நிதி ஆயோக் மற்றும் நிதி ஆணையம் இலவசங்களை வாரி வழங்கும் மாநிலங்களுக்கு செக் வைக்க வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 11:14

இலவச மின்சாரம் தரமாட்டேன் என்று உறுதியாக அறிவித்த மோதியை குஜராத் மக்கள் மூன்று முறை முதல்வராக அமர்த்தினர். இப்போ மக்கள் விஷத்தை விரும்பினாலும் அதைக் கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டு விட்டது. இல்லாவிட்டால் காணாமலடித்து விடுவார்கள். வீணான இலவசங்கள் மற்றும் பெட்ரோல் விலைக் குறைப்பால் திவாலான அண்டை நாடுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


venugopal s
ஜூன் 30, 2024 10:56

கர்நாடகாவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக இலவசங்கள் அறிவித்து இருந்தாலும் தோற்றிருக்கும். முதலில் இந்த லாஜிக்கே தவறு, எல்லாக் கட்சிகளும் இலவசங்கள் அறிவித்தாலும் ஒரு கட்சி மட்டுமே வெற்றி பெற முடியும் மற்ற கட்சிகள் தோற்கவே செய்யும்.


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 30, 2024 09:40

உபி ஜனங்கள் கைவிட்டது மாதம் 8500. வருடம் ஒரு லட்சம் ஓசியில் தருவதாக கூறி ஓட்டு வாங்கியதை வசதியாக காங்கிரஸ் மறக்கும். மக்கள் மறப்பதில்லை


பிரகாஷ்
ஜூன் 30, 2024 08:27

பத்து வருஷ டிரெய்லர் பிக்சரிலே மக்களிடமிருந்து மொத்தமா உருவியாச்சு. இனிமே உருவறதுக்கு ஒண்ணுமில்லேன்னு உ.பி ஜனங்க கை விரிச்சுட்டாங்க. இனியும் ஆட்சி செய்யணும்னா ஏதாவது போட்டே ஆகணும். கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு குடுக்கணும். இதுதான் அரசியல் கோவாலு.


hari
ஜூன் 30, 2024 12:14

நமக்கு டாஸ்மாக்யும் ஓசி பிரியாணியும் மாறி.... அப்படித்தானே கோவாலு


KR
ஜூன் 30, 2024 07:27

Smart move by BJP. Give what people want. If they want freebies over development, BJP can also do it. Useless things cannot be the exclusive guarantee domain of Congress party. Now, let's see what new kind of guarantees Congress will come up. Come let's both burn down the house we want to buy and live, seems to be the race to the bottom in Indian politics. God save the nation


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ