உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: கூட்டணியை உடைத்த கொலை!

டில்லி உஷ்ஷ்ஷ்: கூட்டணியை உடைத்த கொலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் உள்ள கோல்கட்டா மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டருக்கு ஏற்பட்ட அநீதியால், நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இளம் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வெறித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.தற்போது, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள், சம்பவம் நடந்த மருத்துவமனையை தாக்கி, சி.பி.ஐ.,க்கு தேவையான ஆதாரங்களை அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a6esdp1j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தங்கள் கூட்டணியில் மம்தா இருப்பதால், 'இண்டி' தலைவர்கள் துவக்கத்தில் அமைதியாக இருந்தனர். ஆனால், போராட்டம் பெரிதாகவே, பிரியங்கா, ராகுல் உட்பட பலர் மேற்கு வங்க அரசை கடுமையாக விமர்சித்தனர்; இதனால், மம்தாவிற்கு கோபம் அதிகமாகியது.ஏற்கனவே இவருக்கும், ராகுலுக்கும் ஆகாது. 'எதிர்க்கட்சி தலைவராக ஆக்கப்பூர்வமாக செயல்படாத ராகுலுக்கு, பிரதமர் பதவி மீது ஆசையா?' என, கோபமாக தன் கட்சி தலைவர்களுடன் பேசும்போது கூறினாராம் மம்தா. இதையடுத்து, தன் கட்சி தலைவர்களுக்கு ஒரு உத்தரவிட்டுள்ளார்.உடனே லோக்சபாவில் மம்தா கட்சியின் தலைவர் சுதிப் பந்தோபாத்யாயா, சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதினாராம். அதில், 'நாங்கள் இண்டி கூட்டணியில் இல்லை; எங்களுக்கு லோக்சபாவில் தனி இடம் ஒதுக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளாராம். இண்டி கூட்டணி முழுதும், ஓர் அணியாகக் கருதி, சபையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒரு கூட்டணியாக இருக்கும்போது, எதிர்க்கட்சி தலைவர் வழிகாட்டுதலின்படி தான், யார் யார் சபையில் பேச வேண்டும் என்பது முடிவு செய்யப்படும். இனிமேல், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் லோக்சபாவில் தன்னிச்சையாக செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
ஆக 18, 2024 14:47

தேச நலனுக்கு எதிரான இந்தி கூட்டணி.... புட்டுக்கும் என்பது முன்பே தெரிந்த விஷயம் தானே.... அதுவும் ஒரு வகையில் நாட்டுக்கு நல்லது தான்.


xyzabc
ஆக 18, 2024 14:19

definition of devil.


ramarajpd
ஆக 18, 2024 12:32

மருத்துவரும் சாதாரண மனிதனும் ஒன்றில்லை, இனிமேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ?️?️


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 18, 2024 10:01

தேர்தலுக்கு முன்பே கூட நல்லுறவு இல்லை .....


அரசு
ஆக 18, 2024 05:37

என்னே உங்கள் கற்பனை வளம். மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?


ஆரூர் ரங்
ஆக 18, 2024 10:05

INDI கூட்டணிக் கூட்டங்களில் திரிணமூல் கலந்து கொண்டது மறந்து விட்டதா?


R K Raman
ஆக 18, 2024 17:06

கூட்டணி உண்டு ஆனால் இல்லை . ... டில்லியில் உள்ளது பஞ்சாபில் இல்லை ஹரியானாவில் உண்டா தெரியவில்லை ஒரே குறி மோடி எதிர்ப்பு. பொய் சொல்லி ஓட்டு வாங்க வேண்டும் ... எப்படி விளங்கும்?


மேலும் செய்திகள்











புதிய வீடியோ