உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: சிக்க போவது யார்?

டில்லி உஷ்ஷ்ஷ்: சிக்க போவது யார்?

புதுடில்லி: 'நம் நாட்டில் நடக்கும் தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, அமெரிக்க நிறுவனம், 182 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது' என, வெடிகுண்டு ஒன்றை துாக்கிப் போட்டார், அமெரிக்க அதிபர் டிரம்ப். இது குறித்து விசாரணை நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.தேர்தல் கமிஷனுக்கும், இந்த நிதிக்கும் என்ன சம்பந்தம்? இது தொடர்பாக பல விஷயங்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. தலைமை தேர்தல் கமிஷனராக, 2010 ஜூலை முதல் 2012 ஜூன் வரை பதவி வகித்தவர், சகாபுதீன் யாகூப் குரேஷி. இவருடைய பணிக்காலத்தின் போது, உலக அளவில் தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி அளிக்க, டில்லியின் துவாரகா பகுதியில் ஒரு புதிய அமைப்பு துவங்கப்பட்டது.அதே நேரத்தில், ஒடிசாவைச் சேர்ந்த, 'இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ்'அதிகாரி ஒருவரை தேர்தல் கமிஷனில் இயக்குனராக நியமித்தார் சகாபுதீன் யாகூப் குரேஷி; இதற்கு அதிகாரிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு. ஆனால், சகாபுதீன் யாகூப் குரேஷி எதையும் பொருட்படுத்தாமல் அந்த அதிகாரியை நியமித்தார்.மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தொடர்பு, கூட்டம் என, தலைமை தேர்தல் அதிகாரி செய்யும் வேலையை, இந்த ஒடிசா அதிகாரி செய்யத் துவங்கினார்; இதற்கு பல மாநில தேர்தல் கமிஷனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இன்னொரு பக்கம், உலக அளவில் தேர்தல் பயிற்சிக்காக துவங்கப்பட்ட அமைப்பு வாயிலாக, ஏரளமான வெளிநாடுகளுக்கு சென்று வந்தார் அந்த அதிகாரி. தேர்தல் கமிஷனின் எந்த அதிகாரியும், இவர் அளவிற்கு உலக நாடுகளுக்கு பயணம் செய்தது இல்லை.ஒருமுறை, வெளிநாட்டில் நடந்த கூட்டத்திற்கு, அந்த கூட்டம் முடிந்த பின் தான் சென்றாராம். மற்றொரு முறை, ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு விசா இல்லாமல் சென்று மாட்டிக்கொள்ள, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக உதவியால் தப்பினாராம். இவரது வெளிநாட்டு பயணத்திற்கெல்லாம், 'அமெரிக்க நிதிதான் காரணம்' என, சொல்லப்படுகிறது.'இந்த பயிற்சி அமைப்பு என் பணிக்காலத்தில் தான் துவங்கப்பட்டது; ஆனால், அமெரிக்காவிலிருந்து நிதி எதுவும் வாங்கவில்லை' என, மறுத்துள்ளார் சகாபுதீன் யாகூப் குரேஷி. இதை யாரும் குறிப்பாக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளே நம்ப தயாராக இல்லை. மத்திய அரசின் விசாரணையில், முக்கியமான விஷயங்கள் வெளியாகும் என, பலரும் நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pat13.krr
பிப் 23, 2025 19:32

மூர்கம் இந்த மாதிரி தேசத்திற்கு எதிரான செயலை செய்வது ஒன்றும் புதிது அல்ல. இவரை போன்றவர்களை பெரிய பதவியில் நியமித்தால் ஆபத்து.


அப்பாவி
பிப் 23, 2025 08:53

அப்பிடீன்னா 2012 க்கப்பறம் அமெரிக்காவிலிருந்து நிதி வரலையா? குடுக்காத நிதியை இப்போ தடுத்து நிறுத்துறாங்களா? நம்மள விட கேவலமா இருக்காங்களே.


naranam
பிப் 23, 2025 01:46

குரேஷி ?


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
பிப் 23, 2025 08:49

பெயரைச் சொன்னாலே தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பரம் நம்ம குரேஷி ஐயாவையே சாரும். பொம்மை மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவனவன் நல்லா விளையாண்டு இருக்கிறான்கள். திமுக ஒரு பக்கம் மத்தியில் அமைச்சர் பதவிகளை வாங்கி கொண்டு ஆ.ராசா 2Gயிலும், T.R பாலு கடலில் தூர் வாருவதிலும் தயாநிதி தனியாக டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியும் சும்மா ஊழலில் திளைத்தார்கள். அந்த நேரத்தில்தான் இந்த தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி ஜார்ஜ் சோரஸ் கம்பெனியான ஓபன் சொசைட்டி மூலம் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு சோரஸ் மற்றும் சோனியாவின் போன்றவர்களின் உத்தவுப்படி தேர்தலை நடத்தினார். இன்னும் இது போல பல ஊழல்கள் வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் அரங்கேறி இருக்கிறது அதுதான் இப்போது ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டு இருக்கிறது. நல்ல வேளையாக மோடி பிரதமராக வந்ததால் நம் பாரத தேதம் தப்பித்தது. இனிமேல் காங்கிரஸ் கட்சி சோனியா, ராகுல், பிரியங்கா தலைமையில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இனி அக்கட்சி தலையெடுக்க வாய்ப்பு இல்லை. அப்படி தலையெடுக்க வேண்டுமானால் சோனியா மற்றும் ராகுல் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பம் அல்லாதவர்கள் குறிப்பாக சசிதரூர் போன்ற தலைவர்கள் அக்கட்சிக்கு தலைவராக வந்தால் குத்துயிரும் கொலை உயிருமாக கிடக்கும் காங்கிரஸ் கட்சி கொஞ்சமாவது தலை தூக்க வாய்ப்பு இருக்கிறது.