மேலும் செய்திகள்
இந்தியா ஹிந்து நாடு; இதை ஏற்க அரசியலமைப்பு ஒப்புதல் தேவையில்லை
4 hour(s) ago | 3
வட்டிக்கு கடன் வாங்கி ரூ.30 ஆயிரம் லஞ்சம்!
21 hour(s) ago | 11
தைப்பூச விழாவில் ஸ்டாலின் பங்கேற்பாரா: பா.ஜ., கேள்வி
22-Dec-2025 | 38
பொள்ளாச்சி பகுதியில், பூத்சிலிப் உடன், வாக்காளர் கையேடு வழங்கும் பணி நேற்று துவங்கியது.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்டபெரிய நெகமத்தில், பாகம் எண், 96ல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா, பூத்சிலிப் வழங்கும் பணியை நேற்று துவக்கி வைத்தார்.தாசில்தார் ஜெயசித்ரா, தேர்தல் துணை தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் ராமராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,'வாக்காளர் பெயர், முகவரி சரியாக உள்ளதா என பார்த்து வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூத் சிலிப் கொடுக்கும் போது, ஓட்டுப்போட வேண்டும் என்றும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது,' என்றனர். 'க்யூ.ஆர்., கோடு'
பூத் சிலிப், வாக்காளர் புகைப்படத்துடன் இருக்கும். இந்த முறை, பூத் சிலிப்பில், 'க்யூ.ஆர்.,' கோடுடன் வெளியிடப்பட்டுள்ளது. போட்டோ இருந்த இடத்தில், 'க்யூஆர்' கோடு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சீட்டு, வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடி நிலை அலுவரின் பெயர் மற்றும் அவரது மொபைல் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களும் தங்களது ஓட்டை பதிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். பெண்களுக்கு தனியே வரிசைகள் உள்ளன; மூத்த குடிமக்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை தரப்படுகிறது.பார்வையற்ற மற்றும் பலவீனமான வாக்காளர்கள் ஓட்டை பதிவு செய்ய, ஓட்டு அளிக்கும் அறைக்கும் வயது வந்த ஒரு துணைவரை அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படலாம்.
மேலும், வாக்காளர் கையேடு வழங்கப்படுகிறது. அதில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யும் வழி முறை, உங்களது தகவல்களை சரிபார்க்கவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயரை தேட, வாக்காளர் உதவி மைய செயலியை பயன்படுத்தலாம். voters.eci.gov.in, elections.tn.gov.inமற்றும், '1950' என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம்.ஓட்டு அளிக்க எடுத்துச்செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்த தகவல்கள், ஓட்டளிப்பதற்கான வழிமுறை, ஓட்டு பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி சேவை செயலிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டுள்ளன.
உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பூத்சிலிப் பிரின்ட் செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. பூத் சிலிப் முன்பக்கத்தில் வாக்காளர் புகைப்படத்துடன், பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன.பின்பக்கத்தில், பி.எல்.ஓ., பெயர் மற்றும் தொடர்பு எண். ஓட்டுச்சாவடி மையத்தில், வாக்காளர் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.சிறிய கட்டத்தில், ஓட்டுச்சாவடி அமைவிடத்தை குறிப்பிடும் 'கூகுள் மேப்' சேர்க்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,), வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களுக்கு பூத்சிலிப் வழங்குகின்றனர்.'அரசியல் கட்சியினரிடம் பூத் சிலிப் வழங்ககூடாது. ஒரே வாக்காளரிடம், குடும்ப உறுப்பினர் அல்லாத மற்றவர்களின் பூத் சிலிப் வழங்க கூடாது,' என, பி.எல்.ஓ.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - நிருபர் குழு -
4 hour(s) ago | 3
21 hour(s) ago | 11
22-Dec-2025 | 38